பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 17.5-85 - 303 கள்.பல நூல்கள்; படிக்கும் ஆய்விடங்கள். இருப்பினும் காலம் இன்மையின் தென் ஆசிய நூல்நிலையப் பகுதியினை மட்டும் காணச் சென்றேன். அந்த நூல்நிலைய அலுவலர் (Mr. JAMES NYE, South Asia Librarian lloo, E. 57th Street, Chicaco ILL. 60637). GG5. Gggihsv sst grairuaiff என்னை அன்புடன் வரவேற்றார். உடன் வந்தவர்கள் அவரிடம்என்னை ஒப்படைத்து வேறு பணிமேற் சென்றனர். அவர் பல பகுதிகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். இந்திய நாட்டு மொழிகளில் உள்ள பெரும்பாலான நூல்கள் இங்கே உள்ளன. நம் நாட்டு நூல்நிலையங்களில் காண முடியாத அளவில் எல்லா மொழிகளிலும் பலப்பல நூல்கள் உள்ளன. தமிழில் ஒவ்வொரு நூலிலும் வெளி வந்த அத்துணைப் பதிப்புகளும் வாங்கி வைக்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களுள் பலவும் நிறைந்திருந்தன. மற்றும் அரசாங்கச் செய்தி வெளியீடுகள் (Gazeetee) இருந்தன. பத்து ஆண்டுக்கு ஒரு முறை நம் பாரத நாட்டில் எழுதப் பெறும் மக்கள் தொகை கணக்குப் பற்றிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொன்றிலும் பல படிகள் இருந்தன. அப்படியே மைய, மாநில அரசுகள் அவ்வப் போது இயற்றும் சட்டங்கள் பற்றிய நூல்களும் இருந்தன. இவை அனைத்தையும் அவ்வப்போது கேட்டு வாங்கி, நிறைவு செய்கின்றனராம். தமிழ்ப் பகுதியிலும் பல்வேறு வகைப்பட்ட நூல்கள் - இன்றைய நாவல்கள் உட்பட இருந்தன. பல இதழ்கள் எல்லா மொழிகளிலும் வரவழைக்கப் பெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேசம், பூடான், நேபால், இலங்கை, மால்டிக் தீவுகள் போன்றவை பற்றியும் அண்டையிலுள்ள ஆப்கானிஸ் தான், (மத்திய கிழக்கின் பிரிவு) திபெத் (நெடும் கிழக்கு - Far East) ஆகிய நாடுகளைப் பற்றியும் ஆர்ாய்ச்சி செய் வோருக்கு வேண்டிய அத்தனை நூல்கள், இதழ்கள், அரசாங்க வெளியீடுகள் அனைத்தும் இங்கே உள்ளன.