பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மேலும் அமெரிக்க நாட்டு இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையகம் இங்கேதான் உள்ளது. அதன் தலைவர் திரு. எட்வர்ட்-சி.டிமாக் (Edward-C-Dimock) என்பவர் இங்கே உள்ளனர். அமெரிக்க நாட்டில் பல பாகங்களிலிருந்து 40க்கு மேற்பட்ட உறுப்பினர் இந்தியா நாடு பற்றிப் பலவகையில் ஆய்வு செய்கின்றனர், (தமிழ் நாடு உட்படத்தான்) 1,88,000 மேற்பட்ட அந்த நாட்டு நூல்களும் இதழ்களும் இங்கே உள்ளன. இவையன்றி மற்றொரு பகுதியில் இந் நாடுகளில் வெளிவராத இதழ்கள், மாநாடுகளில் படித்த கட்டுரைகள், நாட்டுப்பாடல்கள்,காட்சிப் படங்கள், இசைத் தட்டுக்கள், நூல் விவரப்பட்டியல்கள் போன்ற பலவும் சேகரித்து வைக்கப் பெற்றுள்ளன. (Room No. 560) எனவே நம் நாட்டைப் பற்றி அறிய வேண்டிய பல தகவல்களை அங்கே அறிய முடியாவிட்டாலும் இங்கே அறிய வாய்ப்பு உண்டு என உணர்ந்தேன். பல ஆய்வாளர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். நூல் நிலையத் தலைவர் மிக நல்லவராக இருந்தார். அனைத்தையும் அழைத்துச் சென்று காட்டியதோடு, மணி 3.30 ஆகிவிட்டமையால் தம் அறைக்கு அழைத்து வந்து, நூலகம் பற்றி மேலும் விளக்கி, 4 மணி அளவில் நடை பெறும் சிறு விருந்துக்கும் வருமாறு அழைத்தார். அதற்குள் மாணவர் வரவே அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, 'ப்ாஷாம் சொற்பொழிவுக்குச் சென்றேன். திரு. பாஷாம் அவர்கள் இந்திய நாட்டினை-தமிழ்நாடு உட்பட பலமுறை கண்டவர். வடமொழி நன்கு பயின்றவர். தமிழும் அறிந்தவர். அவர் பகவத்கீதையைப் பற்றி-கீதையில் sl–ajsir GF(s) usòs (Theism in Bagavat Geetha) Gustauririr. 5மணி வரை அவர் பேச்சு அமைந்தது. பகவத்கீதை என்பது பகவத் கீதம்' என்பதிலிருந்து மருவி வந்த தெனவும், இது இறைவன் பாடிய பாடல் எனப் பொருள் படுவது எனவும் விளக்கிக் காட்டி, கீதையில் பலவிடங்களைத் தொட்டு, அதில் வரும் தெய்வ நெறிகளையும், "கர்மயோகம்’