பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to: சிகாகோ 17.5.85 305 போன்றவை பற்றியும் சத்துவ, தமோ, இராசச குணங்கள் பற்றியும் விளக்கிக் காட்டினார். மேலும் பல்வேறு உபநிடதங்களின் ஒப்புமைப் பகுதிகளையும் பிறவற்றையும் விளக்கியதோடு, பின்வந்த பெளத்த சமயத்துக் கொள்கை களோடு மாறுபட்ட சில கருத்துக்களையும் காட்டினார். அவருடைய வடமொழி இலக்கிய அறிவு நன்கு தெளி வுற்றது. நான் 5 மணிக்குள் புறப்பட வேண்டியவனாதலாலும், கூட்டம் தொடங்கு முன்பே அவரைக் கண்டு, என் வணக்கத் தையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டேன். ஆதலாலும் முடிந்த நிலையில் உடன் வந்த மாணவரோடு அப்போதே புறப்பட்டேன். எனக்காகக் காத்திருந்த திரு. கிருஷ்ணன் அவர்களைக் கண்டேன். பின் திரு. இராமாநுஜம் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். திருமதி. கிருஷ்ணன் அவர்களும் பகவத் கீதைச் சொற்பொழிவுக்கு வந்திருந்தார்கள். தந்தையாரை நேரே அறியாவிட்டாலும் தன் தந்தையாருக்கு அறிமுக மானவராதலால் திரு. இராமாநுஜம் அவர்கள் திருமதி: கிருஷ்ணன் அவர்களையும் வாழ்த்தி அனுப்பினார். பின் நாங்கள் வீடு நோக்கிப் புறப்பட்டோம். மாலை 5 க்கு மேலாகிவிட்டமையால் கார்கள் சாலையில் மிக மிக நெருக்கமாகச் சென்றன. ஒரு கல் கடப்பதற்கு கால்மணி நேரமாயிற்று. எங்கும் கார்மயம். மெல்ல ஏழு மணி அளவில்தான் வீட்டிற்கு வர முடிந்தது. வழியில் நான் நாளை காணவேண்டிய சில இடங்களை எனக்குச் சுட்டிக் காட்டினர். விடு திரும்பியதும், மிகச் சோர்வாக இருந்தமை யின், உணவு கொண்டு சற்று முன்னதாகவே படுக்கச் சென்று விட்டேன். ஏ.-20 -