பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வேலைப்பாடுகள் செய்த வண்ணப் படங்கள், உருவங்கள், பெரும் தோற்றங்கள் . மாறிமாறிவரும் காட் சி க ள் முதலியன சுற்றிலும் அமைக்கப் பெற்று ஒருசூதாடும் கூடமா கக் (Gampling) காட்சி தந்தது. பலர் பலவிடங்களில் அவற்றோடு தொடர்பு கொண்டிருந்தனர். நான் ஒருவகை யான பழம் கலந்த ரொட்டியினையும் காப்பியினையும் அருந் தினேன். காப்பி இங்கே ஒரு கப் நம் நாட்டுப் பணத்தின்படி 7 ரூபாய்/ =ரொட்டி 15|=ரூபாய். பின் வெளியே வந்து வேறிடத்தில் இரு வாழைப் பழங்களும் (ஒன்று 2 ருபாய்) இரு ஆப்பிள்களும் (ஒன்று 4 ரூபாய்) வர்ங்கிக் கொண்டு அறைக்கு வந்து ஒவ்வொன்றை உண்டேன். பிறகு வெளியே புறப்பட்டு, பக்கத்தில் உள்ள இரயிலடிக்குச் சென்றேன். விமான நிலையத்திலிருந்து வரும்போது பலப்பல கடைத் தெருக்களையும் குடியிருப்பு களையும் கண்ட நான் அவ்ற்றின் உயரத்தினைக் கண்டு வியந்தேன். 10, 12 அடுக்குகளுக்கு மேற்பட்டவற்றைக் கண்டு மகிழ்ந்தேன். இரயிலடி மிகமிகச் சிறப்பாக அமைந் துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும். ரோம் - பாரிஸ் முதலிய நகரங்களுக்கும் வண்டிகள் செல்கின்றன. தரைக் கடியில் பெரிய கடைவிதிகள் உள்ளன. பலர் அங்கேயே தேவையான பொருள்களை வாங்குகின்றனர். கடைகளில் அதிகமான , ஆட்கள் இல்லை. எல்லாப் பொருள்களிலும் அவற்றின் விலைகளை (தனியாகவோ - கிலோ கணக்கிலோ) எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுசிறு டிராலிகளும் உள்ளன. அதிக பொருள்களாயின் அவற்றைப் பயன்படுத்தலால், வேண்டியவர் வேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டு, வாயிற்புறத்தில் செல்ல, அங்குள்ளவர் அனைத்துக்கும் பில் இட்டு (எல்லாம் இயந்திர வழியேகம்பியூடர் முறை) தானே வெளியே தெரியுமாறு காட்டுவர். தொகை தந்ததும் அதைக் கிழித்துத் தந்துவிடுவார். எல்லாப் பொருள்களும் ஒரே கடையில் உள்ளமையின் லாங்குபவருக்கு எளிமையாகின்றது. (உடை, உணவு