பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பலர் வருந்தி உழைத்துப் பொருள் தேடி, தமீ கல்வியைக் கற்று, வாழ்வில் முன்னேறுகின்றனர். சிலர் வழுக்கியும் விழுகின்றனர். ஆயினும் அந்த வீழ்ச்சியினையும் இந்தச் சமூகம் தவறாகக் கொள்வதில்லை. அந்த வீழ் வாழ்வில் முளைத்த இளஞ்செல்வங்களைக் காக்கவும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தாய் தந்தையரை மறந்த அறியாத குழந்தைகள் இந்த நாட்டில் உண்டாம். அதனாலேயே நம் நாட்டிலிருந்து இங்கே வந்து வாழும் பல பெரியவர்கள். சிறப்பாகப் பெண்களைப் பெற்றவர்கள் - விரைவாகத் தாயகம் திரும்பத் திட்டமிடுகின்றனர். இதுபற்றி முன்னரே குறித்துள்ளேன். 1288 அடி உயரத்தில் அகன்ற தளம் இருந்தது. நாற்புறமும் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந் தது. தொலை நாடிகளும் இருந்தன. சிகாகோ நகரமும் சுற்றுப் புரங்களும் நன்கு தெரிந்தன. ஒருபுறம் கடல் போன்ற பெரிய ஏரி. இங்கே சிறந்த துறைமுகம் உண்டு. இரு பெருங் கப்பல்கள் நின்றிருந்தன. நான் முன்னமே குறித்தபடி, இயற்கையன்னை இவற்றால் இந்நாட்டுப் பொருளாதாரம் வளர உதவுகிறாள். இவர்களும் சலியாது உழைத்துப் பாடுபட்டுப் பயன்பெறுகின்றனர். மற்றொரு பக்கம் சிறு படகுகள் நூற்றுக் கணக்கில் இருந்தன. மக்கள் உல்லாசமாக அவற்றில் செல்வார்களாம். நகரின் பல்வேறு தொழிற்கூடங்களும், நிலையங்களும் அடுக்கடுக்காகத் தெரிந்தன. அந்த மேல்மாடியில் நம் நாட்டுத் தென்காசி யைச் சேர்ந்த அன்பர் ஒருவர் குடும்பத்துடன் இருந்தார். அவர் இருபது ஆண்டுகளாக இங்கே பணி செய்கின்றவர். என்னைக் கண்டதில் மகிழ்ச்சியுற்றார். சுமார் அரை மணி நேரம் அனைத்தையும் பார்த்துவிட்டுக் கீழே மின்தாங்கி வழியே இறங்கினேன். கிருஷ்ணன் தம்பதியார் காத்திருந் தனர். நான் இறங்கியதும் அதன் வாயிலில் நிற்க வைத்துப் புகைப்படமும் எடுத்தனர். மணி ஒன்று ஆகியிருந்தது. எனவே உணவு கொண்டு பின் மற்றவற்றைக் காணலாம் என்றனர். வண்டியிலேயே நாங்கள் கொண்டு வந்த