பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஒவ்வொன்றும் வளர்ந்த விதமும் பலப்பல வகைகளில் விளக்கப் பெற்றிருந்தன. முதலில் நீர் தோன்றி, பின் நிலம் தோன்றி, கடலில் உயிரினம் தோன்றி, பின் படிப்படியாக மனித நிலை வரையில் அமைந்த கூர்தலறம் (Evolution) விளக்கப்பெற்றிருந்தது. எனினும் அந்தப் பரிணாம வளர்ச்சி அவ்வளவு பொருத்தமாக இல்லை என நான் கருதினேன். நம் மணிவாசகர் கூறிய புல்லாகிப் பூடாய்" என்ற அடிகளுக்கு ஒப்ப அமைந்த இந்தப் பரிணாம வளர்ச்சி பற்றி முன் கண்ட பொருட்காட்சிகளைப் பற்றிக் கூறிய போது (நியூயார்க் - லண்டன்) எழுதியுள்ளேன். இங்கே ஏனோ அது சரியாகக் காட்டப் பெறவில்லை. முதலில் நீரில்தான் உயிரினம் தோன்றிற்று என்பதையும் அவ்வுயி ரினம் தோன்ற அடிப்படைக் காரணமாய அணுக்களின் தோற்ற அமைப்புகளையும் நன்கு காட்டியிருந்தனர். அப்படியே மனிதன் விவசாயத்தைக் காலந்தொறும் எவ்வாறு வளர்த்தான் என்பதைப் படிப்படியாக 12, 000 ஆண்டுகள் கால எல்லையில் காட்டியுள்ளனர். அதற்குமுன் விவசாயம் இல்லை என்பது அவர் கருத்தா என விளங்க வில்லை. இங்கே விவசாயத்துக்குப் பயன்படு கருவிகளின் அமைப்பு முறைப்படுத்தியிருந்தது. இந்நாட்டில் விவசாயம் அனைத்தும் இயந்திரங்களைக் கொண்டே நடைபெறுகின்ற தாகையால், நம் ஊர் மக்களுக்கு இது வியப்பாகலாம். உழவு தொடங்கி அறுவடை தானியம் களஞ்சியம் சேரும் வரையில் இயந்திரங்களே துணை புரிகின்றன. அப்படியே அவன் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை ஆக்குதற்கு உண்டான முறைகளின் வளர்ச்சியும் காட்டப்பெறுகின்றது. நான் முன்னரே குறித்தபடி, காப்பி வைத்தல் - சமையல் செய்தல் போன்றவை யாவும் மின் அணுக்கள் செயலே 'யாகும். மிக எளிதில் - நொடியில் - உணவைத் தரும் நிலை யினை இங்கே காண இயலும். மனித உடம்பினைக் கூறு கூறாக்கிப் பிரித்து, பின் இணைத்து வாழவைக்கும் அளவில் அறிவியல் முன்னேறி உள்ள இந்த நாட்டில் இது வியப்பில்லை. ஆனால் ஒன்றே - இது மக்களை முழுச்