பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 18.5.85 3.11 சோம்பேறியாக ஆக்குவதோடு மறுபக்கம் வேலையில்லாத் .திண்டாட்டத்தையும் பெருக்குகிறது. இப்படியே யாவும் அணுத்திறன் . கொண்டோ - வேறு அறிவியல் சாதனம் கொண்டோ ஆக்கும் நிலை அமையின் பல மக்கள் வேலை யின்றி நிற்க. அவர்கள் வாழ்வு கட்டாயம் கொள்ளை, கொலை என்ற திருப்பத்தில்தான் செல்லும். இந்த நிலை இப்போதே இங்கே உண்டாகத் தொடங்கிவிட்டது என்கின்றனர் சிலர். மனிதனுக்குப் பயன்படும் இரெயில், பிற வாகனங்கள், மோட்டார், விமானம் போன்றவை படிப்படியாக வளர்ந்த வரலாறும், அவை எல்லாப் பொருள்களையும், முறையாக நிறுத்தியே காட்டப் பெறுகின்றன. பழைய இரெயில், விமானம், கார் போன்றவை நிறுத்தப் பெற்றுள்ளன. அவற்றைக் கண்ட - வளர்த்த . இன்றைய நி ைல க் கு க் கொணர்ந்த பல பேரறிஞர்களின் வரலாறுகளும் விளக்கப் பெற்றுள்ளன. இந்நாட்டில் நோபல் பரிசு பெற்ற (சென்ற ஆண்டு பெற்ற நம் நாட்டுச் சந்திரசேகரர் முடிய) அறிஞர் வரிசை அழகுற உள்ளது, அப்படியே மனிதனின் அன்றாடத் தேவைகளான பல்வேறு வகை ஆசனங்கள், உடைகள், பாண்டங்கள் இவை போன்றவை வளர்ந்த வகைகளும் நன்கு காட்டப் பெறுகின்றன. இவைகள் காலந்தோறும் வளர்ந்த வளர்ச்சி பார்த்து வியக்கக் கூடியதேயாகும். அப்படியே அச்சுக்கலை போன்றவையும் பிற கலைகளும் வளர்ந்த வகைகளும் ஒருபுறம் நன்கு காட்டப் பெறுகின்றன. காலங்காட்டும் கருவிகள் பழங்கால முதல் எப்படி எப்படி வளர்ச்சியுற்ற தென்பது ஒரு பக்கத்தே காட்டியுள்ளனர். (இக் கடிகாரத் கண்காட்சி ஒன்றினை . ஜினிவாவில் கண்டது - முன்னரே காட்டியுள்ளேன்). பின்னும் மனிதனுடைய கருவளர்ச்சியினை மிக நுண்ணிய அளவில் பலப்பல கோணங் களில் அழகுற அமைத்து, நாடொறும் வளர்ந்து வரும் வகையில் விளக்குவதும் சிறந்த பகுதி யாகும். அவனுடைய உடற்கூறுகள் பற்றியும், இதயம். நரம்பு. தலை, மூளை