பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 18.5.85 313 எண்ணும்போது நெஞ்சம் துணுக்குறுகின்றது. உலக வல்லரசு கள் அந்த அவல நிலையை என்று உண்டாக்குமோ என்ற அச்சத்தோடு இவைகளையெல்லாம் சுற்றிப் பார்த்தேன். கணிப்பொறி வளர்ச்சி (Computer) பற்றி ஒரு தனிப் பகுதியே உள்ளது. இதைப் பற்றி எண்ணியவர் தொடங்கி, இன்றைய வளர்ச்சி வரை, உதவியவர் தம் படங்களை வரிசையாக வைத்திருப்பதோடு, ஒவ்வொரு நிலையிலும் இக் கணிப்பொறி எப்படி வளர்ந்து, மாறி, வகைப்படுத்தப் பெற்று இன்றைய நி ைல யி ைன உற்றது என்ற வரலாறு யாரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. அப்படியே அதன் இன்றைய செயல், இனி வருங்காலத்தில் இயங்கப் போகும் நிலை இவை பற்றிக் குறிப்புகளும் அறிந்து குறித்துக் கொள்ளத்தக்கன. கணிப்பொறி பெருக்குகிறது, பாடுகிறது, எழுதுகிறது, எண்ணங்களைத் தருகிறது, மறந்ததை நினைப்பூட்டுகிறது, வேடிக்கை காட்டுகிறது, சிரிக்கிறது, சினக்கிறது இன்னும் என்னென்னவோ செய்கிறது. நான் நம் பள்ளிக்கு இங்கே ஏதேனும் பய்ன் பெறு நூல்கள் கிடைக்குமா என ஆராய்ந்தேன். இரண் டொன்றின் பெயர்களைக் குறித்து வைத்துள்ளேன். ஒலி, ஒளி அலைகளின் அசைவுகள், ஊடுருவிச் செல்லும் நிலைகள் பற்றியும் தனித்தனி அறைகளில் விளக்கம் தரப் பெற்றுள்ளன. இவ்வாறு எத்தனை எத்தனையோ எழுதிக் கொண்டு செல்லலாம். நான் அந்த மூன்று மணி நேரத்தில் முற்றும் பார்த்து விட்டேனா என்று சொல்ல முடியாது: அன்றி நான் பார்த்ததை முற்றும் இங்கே குறித்து விட்டேனா என்பதையும் சொல்லமுடியாது. இலண்டன், பாரிஸ், நியூயார்க், சிகாகோ போன்ற இடங்களில் உள்ள பொருட் காட்சிகள் நம்மை மிக மிகப் பழங்காலத்துக்கு அழைத்துச் செல்வதோடு, வரும் எதிர் காலத்தில் எப்படி எப்படி இருப்போம் என்பதையும் ஒரளவு எண்ண வைக்கின்றன. இத்தகைய எண்ணங்களோடு, மாலை 5.30க்கு அனைத்தையும் மூடிவிடுவார்களாகையால் - சில