பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$14 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் துறைகளில் எங்களை வெளியே செல்லலாம் என்று சொல்ல வும், வெளியே வந்தோம் (இடையில், திரு. கிருஷ்ணன் அவர்கள் வந்து, அணு ஆய்வுக் களங்களில் - ஒலி-ஒளி பற்றிய விளக்க இடங்களில் - அனைத்தையும் அறிய எங்களுக்குத் துணைநின்று உதவினார்) ஜூன் 6 முதல் செப்டம்பர் 2 வரை இந்த அரங்கத்திலேயே நம் இந்திய நாட்டின் (India Festival of Science) அறிவியல் விழாக் காட்சி நடப்பதென அறிக்கை அனைவருக்கும் தந்தனர். அதன் மேலட்டையில் நம் தமிழகச் சிற்பி செதுக்கும் நிலையில் அமைந்த தெய்வத் திரு உருவமே காட்சி அளித்தமைக் கண்டு மகிழ்ந்தேன். மாலை 5.30க்கு வெளி வந்து, திரு. காந்தி அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டோம். நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. வழியிடைக் கிராமச் சூழலில் அமைந்த பெரும் பண்ணைகள் விதையிடத் தயாராக உழுதுவைத்திருந்த (பெரும் டிராக்டரால்தான்) நிலை கண்டேன். 6 30க்கு திரு. காந்தி அவர்கள் வீடு சென் றோம். அவரும் அவர் துணைவியாரும் அவர் இரண்டாம் மகனும் எங்களை அன்புடன் வரவேற்றனர். (முதல் மகன் தாத்தா வீட்டில் சென்னையில் இருந்து கொண்டு+2 படிக் கிறான்). அவர்தம் தந்தையாரோடு நாற்பது ஆண்டு களாக நான் பழகிய நிலையெல்லாம் பேசிக் கொண்டிருந்து செட்டி நாட்டார் செல்வளம், விருந்தோம்பும் நிலை இவை பற்றியும் உரையாடிக் கொண்டிருந்து, 8-30 மணிக்கு உணவு கொண்டோம். இளஞ் செல்வன் கார்த்திகேயன் (கார்த்தி என அன்புடன் அழைக்கின்றனர்) ஐந்தாம் வகுப்பு படிக் கின்றவன்; மின் அணுத் துணையால் அவன் ஆக்கும் பல கருவிகள் அமைக்கும் நிலை முதலியன காட்டினன். மகிழ்ந் தேன். உணவுக்குப் பின் அவர்களிடம் அன்புடன் விடை பெற்றுக்கொண்டு, 9 மணிக்குப் புறப்பட்டோம். நீண்ட பயணம் 60கல் தொலைவிருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமை யும் இவ்வாறே அமைகின்றது, அனைத்தையும் எண்ணிக் கொண்டே இரவு 10. 30க்கு வீட்டுக்கு வந்து நாளை செய்ய வேண்டுவன எண்ணி, படுக்கச் சென்றேன்.