பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் சிறிது நேரம் கழிந்த பின் 10.30க்கு திரு. முருகேசன் அவர்கள் வந்தார்கள். அவர் திரு. கிருஷ்ணன் குடும்பத் துக்கும் வேண்டியவராதலின் அனைவரும் உட்கார்ந்து பல பொருள்கள் பற்றிப் பேசினோம். பல்கலைக் கழகங்களின் நிலை பற்றி அறிய விரும்பிய எனக்குப் பல தகவல்களைத் தந்தனர். பேராசிரியர்கள் பதவி ஏற்கும்போது, அவர் வழி யில் கலைக் கழகத்துக்கு மானியங்கள் பெறப் பல்கலைக் கழகம் முயலுமே ஒழிய, பல்கலைக் கழகம் தன் நிதியிலிருந்து தருவது குறைவு. ஒரு ஆசிரியர் பதவி ஏற்றபின், அவர் கீழ் பயிலுவதற்கென மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர் கள் படிப்புக்கு அவர்கள் பணம் கட்டுவதைத் தவிர, அவர் களை ஆதரிப்பதற்கென உயர்ந்த தொழில் நிறுவனங்களை நாடிப் பணம் பெற்றுத் தரவேண்டுமாம். இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பலவும், தத்தம் தொழிலுக்கு ஏற்ற சிறந்தவர்களைப் பெறப் பல்கலைக்கழங்களை நாடி அவர் கள் தேர்ந்தெடுப்பவருக்கென பல ஆயிரம் டாலர்"களைக் கொடுத்து உதவி, பின் அவர்கள் நிறுவனத்திலேயே அமர்த் திக் கொள்ளுமாம். அவ்வாறு உதவி பெறுபவர்கள் நம் நாடுபோல் நிரந்தர அடிமையாகத் தொழில்பட வேண்டிய தும் இல்லை. குறைந்தது ஆறு மாதம் அங்கே பணிசெய்து, பின் விரும்பினால் வேறு எங்கும் செல்ல உரிமை உண்டு. மேலும் இந்த நிறுவனங்கள் இவ்வாறு பெருந்தொகைகள் தருவதால் வருமான வரியில் பெருத்த லாபமும் உண்டா கின்றது. இங்கே வருமானம் உயரஉயர வரி விகிதம் குறை யும் என்கின்றனர். (நம் நாட்டில் நேர் மாறாக அல்லவா உள்ளது). இந் நாட்டிலுள்ள பல தொழிற் சாலைகள், ஆய்வு நிறுவனங்கள் - பிற பெரும்பணிமனைகள் - இவ்வாறு பல லட்சக் கணக்கில் மானியங்கள் தந்து பல்கலைக்கழகங் களுக்கு உதவுகின்றன. நம் நாட்டில் இந்த நிலை ஏது? நம் நாட்டில் உள்ள பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இந்த முறையில் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தே மானியம் அளித்து, தக்கவர்களைத்