பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67357 19-5-85 317 தேர்ந்தெடுக்க உதவி, பின் அவர்களையே தம் தொழிற் சாலைகளில் பணியமர்த்தினால் t 16) நன்மைகள் உண்டாகுமே. வேண்டுமானால் அவர்கள் ஐந்து ஆண்டு, பத்தாண்டுகள் கட்டுப்படுத்தி இருக்க வைக்கலாம். அதனால் தகுதிவாய்ந்தவர் கிடைப்பர். பல்கலைக்கழகத்தின் பொருட் செலவும் பெருமளவில் குறையுமல்லவா! எதற்கெடுத்தாலும் பல்கலைக்கழக மானியக் குழுவையும் அதன் வழி தில்லி அரசாங்கத்தையும் நோக்கியே பழக்கப்பட்ட நமக்கு இந்த மாற்று நெறி ஏற்கப் பெறுமா? எண்ணியாவது பார்க்க வேண்டாமா? நம் நாட்டிலிருந்து வரும் சிறந்த மாணவர் அத்தகைய நிதி உதவி பெற்றுப் பயின்று இங்கேயே பின் பணி ஏற்று, பிறநாடுகளில் அமர்ந்து விடுகின்றனர் என்பதும் அவர்களுக்குத் தெரிந்த ஒன்றுதானே. இவ்வாறு பல்வேறுவகைப்பட்ட கல்வித்துறையின் அமைப்புகளையும் செயல்முறைகளையும் பற்றி இரு பொறியாளர்களும் விளக்கினர். நான் சிலவற்றை முன்னரே குறித்துள்ளேன். எனவே இங்கே திரும்ப எழுத வேண்டாம் என எண்ணுகிறேன். பகல் ஒரு மணி அளவில் அனைவரும் உணவு கொண்டு மறுபடியும் அமர்ந்தோம். எனக்குச் சற்றே சோர்வு உண்டானமையின் (நேற்றைய கடும் சுற்றினால்) ஒய்வுபெறச் சென்றேன். திரு. முருகேசன் அவர்களும் விடை பெற்றுச் சென்றனர். மாலை 4மணி அளவில் எழுந்து, நாளை புறப்பட்டுச் செல்வதற்கென என் ஆடை முதலியவற்றைப் பெட்டியுள் சரிப்படுத்தி வைத்தேன். ஒரு வாரம் எப்படி இந்த சிகாகோ நகரில் ஓடிவிட்டது என்பதை நான் எண்ணிப் பார்த்தேன். முன் நியூயார்க் நகரில் ஒரு வாரம் - இங்கே ஒரு வாரம் இடையில் ஏழு எட்டு ஊர்களில் இருபது நாட்கள்.மொத்தம் 34நாட்கள் இம்மண்ணில் கழித்ததை எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்குத் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரத்துக்கு முக்கிய காட்சி உண்டெனக் கூறி,