பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் காணுமாறு திருமதி. கிருஷ்ணன் அவர்கள் கூறினார்கள்: கண்டேன். நாட்டில் நடக்கும் பல ஏமாற்றும் செயல்களைக் காட்டும் செய்தியாக இன்று இது அமைந்திருந்தது. மக்களைப் பல வகையில் ஏமாற்றிப் பொருள் பறிப்பதைக் காட்டி, அவற்றி லிருந்து விடுபட மக்களை வேண்டிக்கொள்ளும் வகையில் நல்ல விளக்கம் தரப் பெற்றமை கண்டேன். இந்த ஒரு மணி நேரத்தில், பிற தொலைக்காட்சி நேரங்களில் உள்ளமை போன்று அதிகமான விளம்பரங்கள் இல்லாத நிலை குறிப் பிடத்தக்கது. நாட்டு மக்களைப் பல கொடுஞ்செயல்களி லிருந்து மீட்கும் வகையில் இது அமைந்தது போற்றத் தக்கதே. முதலில் இந்த நாட்டில் வியாபார ஒன்றியங்கள் (Trade Union) தனித்த முறையில் பல தேர்வுகள் நடத்து வதைப் பற்றியது. படித்த இளைஞர்களுக்கு, பிழைப்புக்குத் தேவையான கல்வியைத் தருவதாகக் கூறி, சம்பளமாகப் பெருந்தொகைகளை வாங்கிக்கொண்டு, ஏதோ சொல்லிக் கொடுத்து, அதற்கெனச் சான்றிதழும் தந்து அனுப்பும் இந்த ஒன்றியங்கள் பயனற்றவை என்பதை விளக்கியது. அதில் தேர்ச்சி பெறுகின்றவர்களை யாரும் வேலைக்கு எடுத்துக்கொள்ளா அவல நிலையைக் காட்டி, அதில் பயின்றார் விடும் கண்ணிரைக் காட்டி, அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். (அந்த ஒன்றியங்களைச் சட்ட ரீதியாகத் தடுக்க இந்நாட்டு உரிமைச் சட்டம் இடம் தராது போலும்) அறிவுரையோடு அமையாது, அவர்களை அரசாங்கமே நடத்தும் தொழிற் பள்ளிகளில் சேருமாறு சொல்லியும் தேவையாயின் பின் தனித்தனி தொழிற் நடத்த ஆயிரக் கணக்கில் அரசாங்கமே முன் பணம் தந்து ஊக்கு விக்கும் நெறியைக் காட்டியும் ஆற்றுப்படுத்துகின்றனர். இது இன்று நாட்டுக்குத் தேவையானது. நம் நாட்டுக்குத்தான். இரண்டாவது வங்கியின் மோசடி, பல்லாயிரக்கணக் கான மக்கள் தத்தம் சேமிப்பினை அதிக வட்டிக்கு ஆசைப்