பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 19-5-85 319 பட்டு, அரசாங்க ஏற்பு இல்லாத பல பாங்கிகளில் சேர்த்து வைக்க முயன்று பல இலட்சங்களைக் - கோடிகளை கொண்டு குவிக்க ஒரு நாள் திடீரென அது கதவை இழுத்து மூடிச் சென்று விடுவதைக்காட்டி, இத்தகைய பொறுப்பற்ற வங்கி களில் பணம் இட வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். நம் நாட்டிலும் இது போன்ற மோசடிகள் சில ஆண்டு களுக்குமுன் இருந்தன. அரசாங்கத் தலையீட்டால் அது தற்போது தவிர்க்கப் பெற்றுள்ளது. மூன்றாவது விளையாட்டு அரங்கங்கள் - வேடிக்கை காட்சிகள் ஆகியவை அமைத்து, இலட்சக்கண்க்கில் பொருள் சம்பாதிக்கும் அவல நிலை பற்றியது. இது பற்றி நான் முன்னரே குறித்துள்ளேன். நம் நாட்டிலும் பொங்கல் விடுமுறை நாளில் நடைபெறும் பந்து விளையாட்டிற்கு டிக்கெட் பெறப் போ ட் டி யி டு ம் நிலையினைக் கண்ட எனக்கு இது புதிதாகப் படவில்லை. எனினும் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, அங்கேயெல்லாம் மக்களைச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர். எனவே, இந்தத் தொலைக்காட்சி, பல வேடிக்கையான விரசமான - தேவையற்றவைகளைக் காட் டு வ தோ டு, இத்தகைய தேவையான பயனுள்ள காட்சிகளையும் காட்டு வதறிந்து மகிழ்ந்தேன். பின் 10 மணி வரையில் கொலம்பஸ் அமெரிக்காவினைக் கண்ட படக் காட்சியினைக் கண்டேன். ஆம்! 1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் நாள் அவர் கால் வைத்தவரை - தாய் நாட்டிலிருந்து பல எதிர்ப்புகளுக்கிடையில் புறப்பட்டு, கடல் கடந்து அமெரிக்க நாட்டில் கால் வைத்து மகிழ்ந்த நிலையினைக் கண்டேன். (பிற்பகுதி நாளை தொடருமாம்). அவன் அன்று அடைந்த மகிழ்ச்சியினைக் கண்ட அதே இன்ப நிலையில் இன்று தாயகத்தை விட்டு 12,000 கல் தாண்டிச் சிகாகோவில் இருக்கும் நானும் இருந்தேன். அந்த நிலையில் என்னை மறந்து 10-30 மணிக்கு உறங்கச் சென்றேன்.