பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் (வாஷிங்டன்) 20.5.85 காலையில் கண் விழித்து, கடன்களை முடித்துக் கொண்டு 7-30க்குத் தயாரானேன். திரு. கிருஷ்ணன் அவர் கள் 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியவராதலின் அதற்கு முன் என்னை விமான நிலையத்தில் சேர்ப்பதாகச் சொன்னார். விமானம் 11 மணிக்காயினும், எனக்கு மேலுள்ள பயணங்களுக்கு முன் கூட்டியே பதிவு செய்தல் முதலிய வேலைகள் இருந்ததால் 8 மணிக்கு -சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டேன். விமான நிலையத்தினை 8.30 மணி க்குச் சேர்ந்து, டிக்கெட் பதிவுசெய்து, அடுத்த ஊர்களுக்குச் செல்ல வேண்டியதற்கும் முன் பதிவு செய்து கொண்டேன். சரியாக 11.30க்கு விமானம் புறப்பட்டது. அது மிகப் பெரிய விமானம், மேலைக் கடற்கரையிலிருந்து கீழை நாடு களாகிய ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் நெறியில் அந்நாடுகளுக்குச் செல்லுபவர் பயணம் செய்யக் காத்திருந்தனர். இது வரையில் கீழைக் கடற்கரையில் ஐரோப்பிய ஆப்பிரிக்கா நாட்டுக்குச் செல்லும் மக்கள் நிலைக்கும், இந்த மேலைப் பக்க நிலைக்கும் மாறுபாடு கண்டேன். பல மொழி பேசு பவர்; பல நாகரிகத்தினர்; உலகம் கலந்த மரபு காணப் பட்டது. விமானம் 400 பேர் ஏறக்கூடிய அளவில் பெரியது: நிறைந்தும், இருந்தது. 4 மணி நேரம் பயணம். சுமார் 1500கல் தொலைவு இருக்கும். சூரிச் நியூயார்க் பயணத் துக்குப் பின் இதுவே நீண்ட பயணம், பகலெல்லாம் கண் மூடி இருந்தேன். இன்று காலையில் சிறு தூறலாக ஆரம்