பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் (வாஷிங்டன்) 20.5.85 - 324. பித்த வானம், விமானம் புறப்படும்போது பெருமழையாகப் பெய்தது. எனினும் விமானம் மேலே எழும்பியபின் கதிரவுன் ஒளி தெரிந்தது. இரண்டுமணி அளவில் நல்ல காய்கறி உணவு அளித்தனர். உண்ட பின் வெளியே கண்டேன். எங்கும் பனி மூடிய சிகரங்கள் - அடர்ந்த உயர்ந்த மலைகள் - குன்றுகள் - காடுகள். இந்த அமெரிக்க நாட்டில் மேற்பகுதி மிகுந்த காடுகளும் மலைகளும் உடைய தாகும். இப்பக்கம் மக்கள் தொகையும் குறைவே. இது வரையில் கீழைப்பக்கமே சுற்றி வந்த எனக்கு இனி மேலைப் பக்க அனுபவம் பெற வாய்ப்பு உண்டாயிற்று. கீழே காணும் பனி மலைகள், எனக்கு முன் கண்ட ஆல்ப் மலைகளையும் நம் நாட்டு பூரீநகரையும் நினைவூட்டின. சரியாக 3-30 (மேலைக்கடற்கரை மணி 1-30) விமானம் தரையில் இறங்கியது. இந்நாட்டினைக் கீழ் மேலாக நான்கு பகுதி களாக பிரித்து சூரியன் செல்கதிக்கு ஏற்ப ஒவ்வொரு மணி குறைத்துக் கணக்கிட்டனர். நியூயார்க் பகுதி.12 என்றால் சிகாகோ 11-இடைப்பகுதி 10, மேல்பகுதி 9 என அமையும். எனவே கீழைக் கடற்கரைப் பட்டினமாகிய நியூயார்க்கி லிருந்து மேலைக் கடற்கரை சுமார் மூவாயிரம் கல் தொலை வில் உள்ளது எனக் கொள்ளல் வேண்டும். இந்த சதியின்படி வாஷிங்டன் மாநிலத் தலைநகராகிய சியேடலில் (seattle) பகல் 1.30க்கு வந்து இறங்கினேன். முன்கண்ட வாஷிங்டன் (D. C.) தலைநகர். இது மாநிலம்: இரண்டி னையும் பெயர் கொண்டு பொருந்திப் பார்க்க இயலாது. அது நகரம். இது நாடு. இதன் தலைநகர் சியேடல். இங்கே யாரும் வந்திருக்க மாட்டார்கள்: பேராசிரியர், சிப்மென் (Schiffmen) எழுதியபடி பஸ்சில் சென்று, பின் அவர் குறிப்பிட்ட ஒட்டலுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு, விமானத்தை விட்டு இறங்கி வெளியில் வந்தேன். விமான வாயிலிலேயே ஒரு அமெரிக்கர் (Dr. T. ADAMS) தாங்கள் தானே பரமசிவானந்தம் என்று கேட்டார். நான் வியப்பில் ஆழ்ந்தேன். அடுத்து மற்றொரு ஏ.--21