பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் (வாஷிங்டன்) 20-5.85 323 விமானத்திலேயே நன்கு உண்டதால் பசி இல்லை. எனவே டாக்டர் ஆதாம் அவர்கள் நகரின் பல பகுதிகளைச் சுற்றிக் காணலாம் என, அதற்கு இசைந்தேன். அமெரிக்கா நாட்டு இப்பகுதி அதிக இயற்கை வளம் வாய்ந்ததாக இருக் கிறது. சில குன்றுகளால் ஆகியதே இந்த ஊர். ஊர் மிகப் பெரியதாக இல்லையாயினும் சிறந்ததாகவும் முக்கியமான தாகவும் உள்ளது. பசிபிக் கடலை ஒட்டிய பெரிய துறை முகத்தையும் உடையது. உலகெங்கணும் பறக்கும் போயிங் விமானங்களும் ஜெட் விமானங்களும் இங்கே செய்யப்பெறு கின்றன. வழிநெடுக அவற்றையெல்லாம் காட்டிக் கொண்டே சென்றார். சாலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும் நீலகிரியிலும் கோடைக்கானலிலும் செல்லும் நினைவை உண்டாக்கின. குளிர்நிலையும் அவற்றை ஒட்டியே இருந்தது. பிற இடங் களைக்காட்டிலும் இந்நகர் தூய்மையாக இருந்தது. வளைவு கள்; இறக்க ஏற்றங்கள்: சாலைதொறும் பூத்துக் குலுங்கும் மரவரிசைகள்; சற்றே தள்ளி உயர்ந்த பசுமை மரங்கள்: அவற்றுக்கு அப்பால் குன்றுகள்: நன்னீர் ஏரிகள் இவை இதை ஒரு புது நாடாகவே எனக்குக் காட்டின. அன்பர் இந் நகரை அடுத்த இரு பெருந் தீவுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே பெருஞ் செல்வர்கள் உயரிய மாளிகை கள் கட்டிக்கொண்டு சிறக்க வாழும் இடங்களைக் காட்டி ன்ார். நகர் எல்லையில் பட்டினியால் வாடுபவரும் உண்டு என்றார். நான் முன்னமே இச் செல்வம் கொழிக்கும் நாட்டிலும் பலர் வறுமையில் வாடுகின்றனர் என்பதைக் குறித்துள்ளேன். இங்கே ஒரு சிலரைக் காணவும் முடிந்தது. இரு தீவுகளைக் கடந்து எங்கும் உள்ளமைபோன்று அமைந்த நல்ல சாலைகள் - மலைகளானமையின் அதிக அகலமில்லாத சாலைகள் - வழியே நகரின் பிற பகுதிகளையும் கண்டு வந்தேன். இந்த நகரைச் சுற்றி நல்ல நீர் ஏரிகளும் உள்ளன. அவை கடல் மட்டத்துக்கு உயரத்தில் உள்ளமையின் வழி உண்டானால் அனைத்தும் கடலில் கலந்து வெற்று