பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324. ஏடு நாடுகளில் எழுபது நாட்கள் நிலமாக இடம் மாறலாமல்லவா! ஆனால் அரசாங்கம் அதைத் தடுத்துள்ளது. நம் நாட்டில் நகரங்களைச் சுற்றி - சிறப்பாகச் சென்னை நகரத்தைச்சுற்றி உள்ள ஏரிகளை யெல்லாம் வாழ்விடமாக மாற்றிப்பின்வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டால் சோறு போடும் அந்த அவல நிலையினை எண்ணி இவர்களைப் பாராட்டினேன். மேலும் இவர்கள் அப்படியே விட்டு விடவில்லை. இடையில் பெருங் கால்வா யினை வெட்டி, ஆனால் இந்த நல்ல நீர் கடலில் செல்லா வகையில் அணைகளை (மூன்று இடங்களில்) இட்டு தகைத்த தோடு, அவற்றின் வழி இந்த நன்னீர், கடலில் போகா வழியில் கப்பல்களை உள்ளே கொண்டு வரவும் ஏற்பாடு செய்கின்றனர். அந்த அணைகளெல்லாம் சற்றே தள்ளி இருந்தமையின் சென்று காண முடியவில்லை. (நாளை நேரம் இருந்தால் காண இருக்கிறேன்) இந்த நன்னீரில் ஒரு வகை உயரிய மீன் - இங்கே பலருக்கும் உணவாயமைந்த நல்ல மீன் . முட்டையிட்டுக் குஞ்சாகி, பின் கடலில் சென்று வளர்ந்து - மறுபடியும் துள்ளித் தாவி - அந்த அணைகள் வழியே இந்த நின்னிர் ஏரிகளுக்குத் திரும்பி வந்து மக்கள் உணவாகத் தம்மை ஆட்படுத்திக் கொள்ளுகின்றனவாம். இந்த நாட்டின் செல்வ வளத்துக்கு இப்படி இயற்கையும் மனிதனின் கைவண்ணத் திறனும் உலையா முயற்சியும் போட்டியிட்டு உதவுவதாலேயே - வாழ்க்கை முறையும் பண் பாட்டு நெறியும் எவ்வகையில் இருப்பினும் - செல்வ வளமும் பிற தலங்களும் உலகமே வியக்கும்வண்ணம் உயர்ந் துள்ளன. அன்பர் இந்த இடங்களையெல்லாம் காட்டிக்கொண்டு, பிற்பகல் 3.00 மணி அளவில் எனக்கென அமைந்த விடுதியில் என்னைச் சேர்த்தார். பிறகு 5 மணிக்கு வருவதாகவும் அவர் வீட்டில் மாலைச் சிற்றுண்டிக்கு வருமாறும் கூறிச் சென்றார். நானும் பயணக் களைப்பால் சோர்ந்திருந்தமை யின் சற்றே ஒய்வு கொண்டேன். அந்த விடுதியில் என் அறை மேல் மாடியில் இருந்தமையில் (பல்கலைக்கழகத்தின் பக்கத்