பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 . ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அன்பர் 5.30க்கு அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிறு மனை; எளிய வாழ்வு; அமர வைத்துத் துணைவியாரை அறிமுகப் படுத்தினார். பிஸ்கட், ஒரு ஆப்பிள், டீ இவை வழங்கப் பெற்றன. அதற்கு முன் ஒரு சிறு பிளாஸ்டிக் பையில் நான்கு இலைகளோடு கூடிய ஒரு தொகுதியினை என்னிடம் நீட்டினார். நான் என்ன எனக் கேட்டேன். அது நம்மூர் ஆரைக் கீரையைப் போன்று இருந்தது. இந்த இலை பெரும்பாலும் மூன்று பிரிவாகத்தான் இருக்குமாம். நான்கு இலைப் பிரிவுகளோடு இருப்பதில்லையாம். எப்போதோ எங்கோ அது கிடைக்குமாம். அப்படிக் கிடைத்தால் அது கிடைத்தவர்தம் வருங்காலப் பெரு வாழ்வுக்கும் சிறப்புக்கும். செழிப்புக்கும் எடுத்துக் காட்டாக - முன் அறிவிப்பாக அமையும் என்றார். என்னை விட்டு வீட்டிற்குச் சென்ற போது அவர் வீட்டு வாயிலில் அது காணப் பெற்றதாம். எனவே என் வருங்காலத்தைத்தான் (இது வரையில் இல்லாமையால்) இன்று குறித்தது என்றும் இதை நான் உடன்வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறி, என் கையில் திணித்தார். நான் தங்கள் வருங்காலம் சிறக்கட்டும்; உங்களிடம் இருக்கட்டும்' என்று கூறியும் கேட்கவில்லை. ஆதல் நின்னகத் த்டக்கிச் சாதல் நீங்க எமக் ந்ேதனையே' என்று அதியமானைப் பார்த்து ஒளவை பாடிய அடிகள் என் நினைவுக்கு வந்தன: கூறினேன். அவர் புன்முறுவல் பூத்தார். சிற்றுண்டிக்குப் பிறகு ஐந்துகல் தொலைவிலுள்ள பசிபிக் கடல் பக்கம் செல்லலாம் என்றார். இது வரையில் காணாத கடலைக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் புறப் பட்டேன். (எப்போதோ சிங்கப்பூர் சென்றபோது அதன் சார்பான சிறு கடல்களைக் கண்டதுண்டாயினும் அப்பெருங் கடலை - உலகிலேயே பெரிய கடலைக் காணப் போவதில் தனி மகிழ்ச்சி உண்டாயிற்று) வழியில் ஓர் உயிர்விலங்குக் காட்சி உளதென்று சுட்டிக்காட்டி நாளை காணலாம்' என்றார். வழிநெடுக நன்னீர்க் கழிகளும், கடல் ஒரத்துக் கழிளும் அவற்றை ஒட்டிய சாலைகளும் இருந்தன. அங்கெல்