பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஏழு நாடுகளில எழுபது நாட்கள் உட்காரும் இடம் எல்லாம், இரப்பர் பஞ்சிட்ட இருக்கை களுடன் நல்ல இடைவெளியீட்டுக்கிடையில் அகலமாக-இருக் கின்றன. அடிக்கடி வண்டிகள் வந்தும் சென்றும் இருக்கின் றன. டிக்கெட் பரிசோதகரோ, படுக்கைவிரிக்கும் தரகரோ இல்லை. டிக்கெட் தருவதற்கு மட்டும் விற்பனையாளர் உள்ளனர். எல்லாம்.மின்சாரத்தின் துணையால் இயங்கு. வதால் யாதொரு இடர்ப்பாடும் இல்லை . . இத்தகைய இரயில் நிலையத்தைப் பார்த்துக்கொண்டே வெளியில் வந்தேன். மணி நான்கு ஆகியிருந்தது. எனவே அருகிலுள்ள பொருட்காட்சியினையும் கடிகாரப் பொருட் காட்சியினையும் காண, ரயிலடியிலேயே வந்து'வண்டியில் (Bus)ஏறினேன். பஸ் பற்றியும் இங்கே ஒன்று சொல்லத் தான் வேண்டும். - இங்கே பெரும்பாலோர் கார் வைத்துள்ளமையின் பஸ்’ சில் அதிகக் கூட்டம் இல்லை என அறிந்தேன் (பதினைந்து பேருக்கு ஒரு கார் வீதம் இருக்கிறது என்றனர்). பஸ் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு நிறுத்துமிடத்தும் (Bus stop) உள்ள அந்த பஸ்களுக்குரிய "டிக்கெட்' பெட்டியில் தேவை யான காசு இட்டால் உரிய டிக்கெட் வெளிவருகிறது. அது அடுத்த ஒரு மணி நேரத்துக்குச் செல்லும். விலை பிராங்கு 1-20 (ரூபாய் 6=). பல பஸ்களிலும் மாறி ஏறலாம். பின்பும் அதைப் பயன்படுத்தினாலும் சரிபார்க்க யாரும் இல்லை. மக்களிடத்தில் அரசாங்கம் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது. நான் (1 பிரா 20 சென்டு) ஒரு டிக்கெட் எடுத்து, பொருட்காட்சி பக்கம் செல்லும் உந்து வண்டியில் ஏறினேன். வழியில் ஜினிவாவுக்கே அழகு செய்யும் ஏரியின் அகன்ற கால்வாய் அழகுற நீரோட்டம் பெற்றிருந்தது. சுற்றிலும் பனிதோய்ந்த சிகரங்களைக் கொண்ட மலைகள் கண்ணுக்கு அழகாகவும் இனிமையாகவும் இருந்தன. விமானத்தில் வந்தபோது அவைகளைக் கண்டு மகிழ்ந்த ந்ான், இங்கே நின்று நாற்புறமும் நோக்கி மகிழ்ந்தேன்.