பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வும் அப்போது வேதபுரியுடன் பயின்றதாகவும், சென்னை யில் பணிபுரிந்து, பின் கனடாவிலிருந்து, இங்கே வந்து மூன்றாண்டுகள் முடியப் போவதாகவும் அவர் தம் பொறி யியல் துறையில் டாக்டர் பட்டத்துக்கு உரிய ஆய்வினை முடித்துத் தரப்போவதாகவும் கூறினார். அவர்தம் துணைவியார் கோவையில் மனையியல் கல்லூரியில் பயின்று, தற்போது இங்கே பல்கலைக் கழகத்தே தமிழ் பயிற்றும் பணியில் உள்ளதாகவும் கூறினார். அவர்கள் இருவரும் அன்புடன் ஏற்று நல்ல விருந்து அளித்தனர்: 'இரண்டு நாட்கள் விடுதி உணவுதான்' என்ற எண்ணத்தில் வந்த எனக்கு இந்த உணவு நன்கு அமைந்திருந்தது. மகிழ்வாக இருந்தது. நாளை இரவும் துறைத் தலைவர் வீட்டில் விருந்தாம். (அமெரிக்கர்) தமிழுக்காக - எனக் காக அன்று.இப்படிப்பிற நாட்டினர் தாமே முன்வந்து உதவு நிலையினையும் அங்கேயே வாழும் தமிழர் பெரும் பாலோர் 'தமிழ் தமிழ்' என்று தம்பட்டம் அடித்து அமைதி யுறும் நினையினையும் எண்ணினேன். திரு. நடராசன். அவர்கள் எங்களைப் புகைப்படம் எடுத்தார். குழந்தை பிருந்தாவும் என்னுடன் ஒட்டிக் கொண்டது. திரு. ஆதாம் அவரும் அவர்தம் துணைவி யாரும் விடைபெற்றுச் சென்ற பின் (உணவுக்குப் பிறகு அவர்கள் நம் உணவினைச் சுவைத்து உண்டனர்.) 9 30க்கு அறைக்கு வந்தேன். பக்கத்தில் இருந்தமையின் திரு. நடராசன் அவர்களும் குழந்தையும் உடன் வந்து விட்டுச் சென்றனர்! நான் இந்த நாட்டு இயற்கை வளத்தையும் அதைப் பயன்படுத்தி வாழ்க்கை வளத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளும் நிலையினையும் பிறவற்றையும் எண்ணி,(நம் நாடு இந்த நிலையை என்று எய்துமோ!) என்ற உணர்வுடனேயே 10.30 மணி அளவில் உறங்கச் சென்றேன்.