பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் 21.5.85 காலை 7மணிக்கு திரு. நடராசன் சிற்றுண்டிக்கு அழைக்க வருவதாகச் சொன்னார். எனவே சற்று அயர்ச்சியாயிருந்த போதிலும் விடியற்காலையிலேயே எழுந்து, கடன்களை முடித்துக்கொண்டு, குறிப்பினையும் எழுதி முடித்தேன். பின் இன்றைய பணி பற்றிச் சிந்தித் தேன். சரியாக 7மணிக்கு நடராசன் அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் வீட்டிற்குச் சென்று காலைச் சிற்றுண்டி (இடியப்பம்) கொண்டு அறைக்கு வந்து பிற வேலைகளைக் கவனித்தேன். சரியாக 9.15க்குத் திரு. ஆதாம் அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் பல்கலைக் கழகத்துக்குப் புறப் பட்டேன். பிறகு மாலை வரையில் பல பணிகள் இருந்தமை யாலும் இரவு 8மணிக்குத் திருமதி லீ (Lee 8 Jerry Shultz) அவர்கள் வந்து தம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாலும் என் சாமான்களைக் கட்டிவைத்து 12மணிக்கு விடுதி அலுவல் அறையில் வைக்குமாறு சொல்லிப் புறப்பட்டேன். 9.30க்குப் பல்கலைக்கழகம் சேர்ந்தேன். அங்கே நேராகப் பொதுநூல் நிலையம், துறை நூல்நிலையம் முதலியவற்றை பேராசிரியர் சிப்மென் அவர்கள் செயலர் அழைத்துச்சென்று காட்டினர். பல தமிழ்நூல்கள் இருந்தன. தென் ஆசியப் பகுதி அறையில் இப் பக்கம் உள்ள எல்லா மொழிகளுக்குரிய நூல்களும் இருந்தன. அனைத்தையும் பார்க்க முடிய வில்லை. 10.30க்குப் பேராசிரியர் அறைக்குச் சென்றேன். அவர்தம் மர்ணவர் சிலர் இருந்தனர். இவர்கள்ை அறிமுகம் செய்து வைத்து, கணிப்பொறி இயங்கும் அறைக்கு என்ன்ை