பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கேட்டேன். இந்தப் பகுதியில் முன்னர் சியாஸ் என்ற பழங்குடி மக்கள் பெருவாரியாக வாழ்ந்தனர் என்றும் (அவர் தற்போது பிற சமூகத்துடன் கலந்து ஒன்றி விட்டனர் போலும்) இந்நகர அமைப்பின்போது அவர்கள் வாழ்ந்த இடத்தினை அவர்தம் இனப் பெயராலேயே அமைக்க வேண்டி இப் பெயர் இட்டனர் என்றும் கூறினர். பொருத்த மாக இருந்தது. இந்த அம்மையார் இந்த ஊரைச் சார்ந்த வராதலாலும் இவர் கணவர் இங்கே வாணிபம் புரிவதாலும் இந் நகர் பற்றியும் பிற பற்றியும் நன்கு அறிந்திருந்தார். காட்சி சாலையில் பலவற்றைக் கண்டோம். எண்ணற்ற பறவை இனங்கள், விலங்குகள் இருந்தன. பரந்த நிலப்பரப் பில் அமைந்திருந்தது. எனினும் நம் நாட்டில் உள்ள சில மிருகக் காட்சிக் சாலையினும் சிறியது என்றே கூற வேண்டும். ஒட்டைச் சிவிங்கி, மான், காட்டு எருமை போன்ற விலங்கு களும் இருந்தன. மனிதக் குரங்கு உட்படப் பல இனங்கள் - குரங்கு வகைகள் இருந்தன. அன்னம் என்று ஒரு நீர் தேக்கத் தில் இருந்த பறவைக்கு (Swan)ப் பெயரிட்டு இருந்தனர். எனினும் அது நம் ஊர் நாரை அல்லது கொக்கு போன்றே இருந்தது. அந்த இனங்களும் உடன் இருந்தன. நம் இலக்கியங்களில் படிக்கும் அன்னம் நீரொழிந்து பாலுண் குருகு நளனுக்குத் தூது சென்ற அன்னம் இந்த மரபினைச் சேர்ந்ததன்று. அது பெரும்பாலும் அருகி விட்டதென்றே கூறுகின்றனர். நீர்வாழும் பல்வேறு வகைப்பட்ட உயிரினங் கள் காட்சிப் பொருள்களாக இருந்தன. காண்டாமிருகமும் பிறவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தன. ஒரு பக்கத்தே பாம்புகள் பல சேமித்து வைக்கப் பெற்றிருந்தன. ஒரு கண்ணாடி அறையில் நம் நாட்டு நல்லப் பாம்புகள் இரண்டு இணைந்திருக்கக் கண்டேன். ஒன்றையொன்று அவை கட்டித் தழுவி நின்ற காட்சி நான் காணாத காட்சியாகும் நம் நாட்டில் நல்லப் பாம்புடன் சாரைப் பாம்பைச் சார்த்திக் கூறுவர். ஆயினும் இங்கே நான் கண்ட காட்சி