பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வந்தனர். இவர் வேறு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் ஒருசேர அமர்ந்து உணவு கொண்டோம். எட்டு மணிக்கு மேலாகி விட்டது. பேராசிரியர் அவர்களும் அவர்தம் துணைவியாரும் நல்ல தமிழில் . வேடிக்கையாகப் பேசி அனைவரையும் மகிழ்வித்தனர். வீட்டுப் பணிகளிலும் இருவருவம் பங்கேற்றனர். 8-30 மணிக்கு என்னை அழைத்துச் செல்ல திருமதி லீ. சட்லஸ் அவர்கள் விடுதிக்கு வருவார். ஆகையால் நான் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். உண்மையில் இது ஒரு குடும்ப விருந்தாக மட்டும் இல்லாது என் பிரிவு ஒரு குடும்பப் பிரிவு எனவே அமைந்தது. திருமதி பேராசிரியர் பலபடிகள் இறங்கி வந்து, கார் வரை நின்று கைகூப்பி விடை கொடுத்த காட்சி மறக்க முடியாதது. திரு. ஆதாம் அவர்கள் என்னை அவர் காரில் ஏற்றிக்கொண்டு. 8.30க்கு விடுதிக்கு அழைத்து வந்தார். திருமதி. லீ அவர் க்ள் தயாராக என் பெட்டிகளை அவர் காரில் எடுத்து வைத்துக் கொண்டு என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார். திரு. ஆதாம் தம்பதிகளிடம் விடை பெற்றுக் கொண்டு திருமதி. லீ அவர்களுடன் அவர் மாளிகைக்குப் புறப்பட்டேன். 30கல் தொலைவில் காட்டுச் சூழலில். அமைதி நிலையில் அமைந்த அவர் வீட்டிற்கு, வழி நெடுக அமைந்த இயற்கைக் காட்சிகளையெல்லாம் காட்டிக் கொண்டே, அழைத்துச் சென்றார். வாயிலிலேயே அவர் கணவர் காத்திருந்து வரவேற்றார். இருவரும் இந்த இனிய சூழலில் தோட்டம் அமைத்து, பல பயிர்களும் விலங்குகளும் வளர்த்து இன்பம் காண்பதையெல்லாம் விளக்கினர். உயர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின், இந்த அமைதி வாழ்வை வேண்டி இங்கே வந்து வாழ்கின்றனர். அமெரிக்க ராயினும் சின்மயா சூழலில் நின்று வேதாந்தம் அறிந்து இந்துவாகவே வாழ்கின்றனர். திருவாளர் சட்லெஜ் அவர் கள் தாம் பெற்ற அனுபவங்களை யெல்லாம் கூறினார். நெடு நேரம் உரையாடிக் கொண்டிருந்து 11 மணி அளவில் உறங்கச் சென்றேன்.