பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜினிவா 4.4.85 25 பொருட்காட்சிச் சாலையில் இறங்கினேன். வழியில் இடம் அறியவும் டிக்கெட் எடுக்கவும் பலர் உதவினர். ஒரு சிலர் நாம் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாது எப்படியோ செல்கையில், ஒருசிலர் (பெண்கள் உட்பட) தாமே வலியவந்து நான் உங்களுக்கு உதவக்கூடுமா? (Canh I help you?) என்று கேட்டுப் போதிய உதவிகளையும் செய்கின்றனர். இங்கே பெரும்பாலும் பிரஞ்சு மொழியே வழக்கத்தில் உள்னமையின் பலருக்கு ஆங்கிலமும் புரிவ தில்லை. நான் ஏறிய பஸ்சில் என் பக்கத்திலிருந்த ஒரு இளம்பெண் வலியவந்து உதவி செய்தாள். தான் நம் அண்டை நாடான பர்மாவைச் சேர்ந்தவரென்றும் (தாய் பர்மியர். தந்தை சுவிஸ்) தன் அண்டை நாட்டிலிருந்து வந்த எனக்கு உதவ வேண்டும் என்றும் கூறினர். வேண்டுமானால் இறங்கி வழிகாட்டுவதாகவும் கூறினர். நான் வேண்டாம் என்றமையின் பொருட்காட்சி நிற்குமிடம் காட்டி இறங்கச் சொல்லி வாழ்த்தி அனுப்பினர். அவர் பள்ளியிலே படிக்கும் இளம் பெண். எனவே அவள் வரும் காலம் சிறப்பதாக' என வாழ்த்தினேன். பொருட்காட்சிச்சாலை நான்கு மாடங்களால் ஆயது. உள்ளே பல வகை விலங்குகள், பறவைகள், பாம்பு, நண்டு, தேள். நட்டுவாக்காளி, வண்டு, தும்பி, மீன் போன்றவை இறந்த நிலையில் உள்ளீடு இட்டு முறையாக அமைத்து யாரும் தொடக்கூடாதவகையில் கண்ணாடி இட்டு, பெரிய பெரிய அறைகளிலும் சிறு அலமாரிகளிலும் அழகுற வைத் திருந்தனர். அவைபற்றிய வரலாறுகள், சிறப்பு நிலைகள்: பறவைகள் பல ஆயிரம் கல் பறந்து நம் நாடுவரை வரும் உண்மைகள் போன்றவையும் பொறிக்கப் பெற்றிருந்தன. திமிங்கலம், யானை போன்றவற்றின் எலும்புக் கூடுகளும் இருந்தன. ஒருபகுதியில் உயிருள்ள மீன்கள் உலவ்விட்டிருந் தனர். அவற்றுள் சில இதுவரையில் நான் காணாதவை. அங்கேயே இவ்வாறு பலவற்றை கண்ட நான், அடுத்துள்ள கடிகாரப் பொருட்காட்சிச்சாலையினையும் கண்டேன்.