பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் உள்ளே செல்லவில்லை. முன்னரே பல பள்ளிகளைக் கண்டமையின் தேவை இல்லை என்று கூறி விட்டேன். வழியில் பல்வேறு சிறுசிறு தொழிற் சாலைகள் இருந்தன: சாலைகள் எங்கும்போல் மிக அழகாயிருந்தன. கார்களும் (கிராமங்களாயினும்) ஒன்றன்பின் ஒன்றாகவே முறைப்படி சென்று கொண்டேயிருந்தன. பக்கங்களில் வானோங்கிய பெருமரங்கள் அழகுறக் காட்சியளித்தன. எதிரில் மிக உயர்ந்த மலை வரிசை உச்சியில் பனி மூடிய சிகரங்களோடு அழகுற விளங்கிற்று. சிறுசிறு குன்றுகளைக் கடந்து சென்ற தால் சாலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன. பரந்த நிலப்பரப்பில் இந் நாட்டு உணவுப் பொருள்களைப் பயிரிடும் பண்ணைகளையும் காட்டினார்கள். பால் பண்ணைகள் முதலியனவற்றையும் கண்டோம். இயற்கையில் மூழ்கிய நிலையிலே அந்த நீர் வீழ்ச்சியின் பக்கல் வந்து சேர்ந்தோம். ஸ்நோகியியமி வீழ்ச்சி 268 அடி உயரத்திலிருந்து வீழ்கின்றது. இந்த அடர்ந்த காட்டகத்தே அதன் வீழ்ச்சியை எதிரிலிருந்து காண நல்ல மேடைகள் அமைத் துள்ளனர், அதிலிருந்து அதைக் கண்டு கொண்டேயிருந் தோம். பலரும் அக் காட்சியினைக் காண வந்திருந்தனர். ஒரு பள்ளியிலிருந்தும் உலா போந்திருந்தினர். பக்கத்தில் ஒரு பெரிய கட்டடத்தினைக் காட்டி, அது ஒரு பெரிய ஒட்டல் என்றும் அதில் உண்பதற்கெனவே சியேட்டலி லிருந்தும் பலர் அடிக்கடி சிறப்பாக விடுமுறை நாட்களில் வருவர் என்றும் கூறினர். அழகிய வீழ்ச்சியின் நீர்த்திரள் வழியே விழும் கதிரவன் ஒளியில் வானவில் பளிச்சிட்டது: நியாகாராவைப் போன்று அத்துணைப் பெரிய தன்றாயினும் அதைவிட 100அடி உயர் வீழ்ச்சி உடையதாய்த் தனிச் சிறப்புடையதாக விளங்கிற்று. இதிலிருந்து மின்சாரமும் எடுக்கிறார்கள். இந்த இடத்தினை 1848ல் கண்டு தெரிவித் தார்களாம். 1855ல் இப் பகுதியில் மக்கள் குடியேறினார் களாம். இந்த ஆற்று நீர் பக்கத்திலுள்ள மலைகளில் காணும் உயர் பனி உருகி ஓடி வருகின்றதாம். இதன் கரை