பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மரங்களை அறுத்து,பயன்படுத்த ஏற்றி அனுப்பும் ஒரு பெரிய தொழிற் சாலையினைக் கண்டோம். பக்கத்திலேயே இரெயில் பாதை - அதனுள்ளும் சென்றது. பல லாரிகள் பெருமரங்களை ஏற்றிக் கொண்டும் இறங்கிய நிலையிலும் சாலைகளில் பறந்து கொண்டிருந்தன. இவை தேவையற்ற அதே வேளையில் மக்கள் வாழ்விற்கு வீட்டமைப்பிற்குப் பயன்படுகின்ற மரங்களாக மட்டும் இருந்தன; விறகுக்கு அன்று என்றனர். இவற்றையெல்லாம் கண்டு கொண்டு வேறு வழியாகத் திரும்பினோம். அந்த வழி கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பெரு வழியாகும். அந்தச் சாலை யில் கார்கள் பறந்து கொண்டே இருந்தன. 1.30க்கு வீடு திரும்பினோம். வீட்டிற்கருகில் மலையில் சாலைக்குரிய கற்களைத் தயார் செய்யும் பெரிய இயந்திர சாலையினைக் கண்டோம். நாட்டின் பல பகுதிகளுக்கு இங்கிருந்து சாலைக் கற்கள் (Gravels) அனுப்பப் பெறுகின்றனவாம். அனைத் தையும் பார்த்துக் கொண்டு வீடு வந்தோம். இந்தக் குடும்பம் அமெரிக்கக் குடும்பமாதலால் நம் நாட்டு வகை உணவுக்கறிகள் தயார் செய்யத்தெரியவில்லை. எனினும் இந்த அம்மையார் மரக்கறி உணவே கொள் பவராதலானும் எனக்கு உணவு சமைக்க வேண்டியும் பல காய்கறிகளை வாங்கி வந்திருந்தனர்; செய்யத் தெரிய வில்லை. நானே உடனிருந்து இரண்டொரு வகைகளைச் செய்து காட்டினேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அடுத்து அவ்வாறே தாமும் செய்ய முயலப்போவதாகவும் கூறினார்கள். இரண்டு மணிக்கு உணவு கொண்டு. சற்றே ஒய்வு பெற்றேன். 4.30க்கு சான்பிரான்சிஸ்கோவிற்கு விமானம்; வீட்டில் 3 மணிக்கு புறப்பட வேண்டும். விமான நிலையத்திற்கு 3 மணிக்கு புறப்பட்டு, 8.45க்குப் போய்ச் சேர்ந்தோம். அம்மையார் பிரியாவிடை பெற்றுச் சென்றனர். நான் நிலையத்துள் சென்று இன்று நான் செல்ல வேண்டியதற்கு உரிய "டிக்கெட்' (நுழைவுச் சீட்டு) பெற்றுக் கொண்டு, தொடர்ந்து காவாய் தீவு செல்லும்