பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அவரை விமானம் காக்க வைத்து விட்டது. விமான நிலையத்துக்கு அருகிலேயே அவர் மனை இருந்தது. அவர் தம் மனைவியாரும் பிள்ளைகளும் அன்புடன் வரவேற்றனர். இங்கே தமிழர் பலர் உள்ளனராம். சில அன்பர்களுக்குத் தொலைபேசியில் சொன்னார். அவர்தம் மருகர் (தங்கை மகன்) வந்து நெடுநேரம் உடனிருந்து பேசிவிட்டுச் சென்றார். பாக்கியராஜ் எனும் மற்றொரு பொறியாளர் (அன்பர் வெங்கடாசலம் அவர்களும் பொறியாளர்) அவர் களும் வந்து பேசிக் கொண்டிருந்தார். இருவர்தம் தமிழ்ப் பற்றையும் தமிழ்நலம் காணத் துடிக்கும் ஆவலையும் கண்டேன். பொறியியல் சம்பந்தமான நூல்களை - தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக எழுதி. வெளியிடலாம் என்ற கருத்தினையும் கூறினேன். அவர்தம் பொறியியலின் சிறப்புப் பிரிவினையும் எழுதக் கூடிய பொருள்கள் பற்றியும் குறித்துத் தருமாறு வேண்டினேன். நாளை பக்கத்தில் உள்ள பார்க்லே சென்று அங்கே உள்ள அமெரிக்க நாட்டுத் தமிழ் அறிஞர்களாகிய திரு. எமனோ அவர்களையும் (81 வயது) கம்பராமாயணத்தை மொழிபெயர்த்த இந்துவாக மாறியுள்ள மற்றொரு தமிழ் அமெரிக்கப் புலவரையும் (George Hart) கண்டுவர முடிவு செய்தோம். திரு. வெங்கடாசலம் அவர்கள் அவர்களுடன் தொடர்புகொண்டு என் வரவு சொன்னார்கள். இரவு 10.30க்குப் படுக்கச் சென்றேன்.