பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ 23.5-85 இன்று சற்று விடியலிலேயே எழுந்து, காலைக்கடன் முடித்துக்கொண்டேன். சுற்றுலா ஊர்தி புறப்படுமிடத்திற்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டு, 7-30 அளவில் அவர் அலுவலகம் (திரு. வெங்கடாசலம்) செல்வர். நான் சுற்றுலா முடித்துத் திரும்பி வந்தபின் மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு அழைத்து வருவர். பின் 50கல் தொலைவிலுள்ள (Burkley) பர்க்கலே சென்று திரும்ப வேண்டும். இங்கே இன்னும் பல அன்பர்களைக் காண வேண்டுமென்றும் கூடுமா யின் நாளைப் பயணத்தை மறுநாள் தள்ளிப்போட முயல லாம் என்றும் கூறி, உரிய வானுர்தி உரிமையாளர்களைக் கேட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார். சரியாக 8மணிக்கு என்னை ஒரு விடுதி வாயிலில் . சுற்றுலா ஊர்தி புறப்படுமிடத்தில் விட்டு, திரு. வெங்கடா சலம் அவர்கள் பணிமேற்சென்றார். ஊர்தி 9க்குப் புறப் படும். அதுவரை அங்கே இந் நகர் பற்றியிருந்த பல குறிப்பு களையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். சரியாக 9க்கு ஊர்தியும் புறப்பட்டது.இன்னும் சில விடுதிகளுக்கும் சென்று முப்பத்திரண்டு பயணிகளை ஏற்றித்கொண்டது. வழி யிலேயே விமானநிலையம் முதலியவைபற்றி விளக்கம் தந்தனர். ஒட்டுநரே விளக்கம் தருபவராக அமைந்தார். நல்ல முறையில் அவர் விளக்கம் அமைந்திருந்தது. மாலை 4 மணி வரையில் பலபல முக்கியமான இடங்களைக் கண்டோம், - -