பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34.6 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கலிபோர்னியா தெருவு என்றே இந்த மாநிலப் பெயராலும் ஒரு தெருவு உண்டு. 'கொலம்பியா தெருவு உண்டு. பிரான்சிஸ்கோ தெருவும் உண்டு. இங்கேயும் சீனா நகர் இருக்கிறது. அவர்கள் முதல்முதலாக இறங்கும் இடம் இதுதானே. சுமார் இலட்சம் குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன என்றனர். அவர்களுள் பெரும்பாலோர் வாணிகம் செய்பவரே. அவர்கள் கடைகள் விடுமுறை என்று இல்லாது, ஏழுநாளும் காலை 10மணி முதல் இரவு 10 வரையில் திறந்திருக்குமாம். அவர்கள் நகரில் பல உயர்ந்த கட்டடங்களுக்கு நடுவே . சந்தியில் ஓர் உயர்ந்த கூடம்பிய பெரிய கோபுரம் இருந்தது. அதுவே மிக உயர்ந்தது. இங்கே இத்தாலிய நகரும் உண்டு. இந்நகரை வளர்த்தவர் பெரும் பாலும் இத்தாலியரே என்றனர். இந்தப் பெரு நாட்டைக் கண்டு பிடித்த கொலம்பஸ்சே இத்தாலியர்தானே. இந்த ஊரில், மற்ற ஊர்களைக்காட்டிலும் அதிகமாக அவர்கள் வாழ்கின்றனர். எனவே கொலம்பஸ் தெரு உண்டு. அருகிலே 12 ஏக்கர் நிலத்தில் ஒரு சிறு தீவு உள்ளது. பசுமை வாய்ந்த நிலப்பரப்பிலே பசுமையான ஒரு கட்டடம் அங்கே உயர்ந்திருந்தது. பெரிய பீட்டர் தொழுகை இடம் அந்த இடத்திற்கே அழகூட்டியது. இங்குள்ள வீடுகளுக்கு நம் ஊர் போன்று சாதாரண ஒடுகளும் இடப் பெற்றிருக்கின்றன. மக்களுள் சிலர் நம் ஊர்க் குருவிக்காரர் போன்று கண்ட கண்ட துணிகளை உடுத்திக்கொண்டு தெருவு தோறும் சுற்று கின்றனர். இப்பக்கத்தில் இதுவும் இன்னும் ஒரு சில நகரங் களும் (நாளை நான் செல்லும் லாஸ் எஞ்சிலஸ்) தாம் சிறந்துள்ளமையில், இவற்றில் மக்கள் தொகை அதிகமாம். இங்கே ஒரு சதுர மைலுக்கு 18,000 மக்கள் வாழ்கின்றன ராம். ஒரு கலைக் கூடமும் அதைச் சுற்றி அழகிய நீர் அகழியும் இருந்தன. இவற்வையெல்லாம் பார்த்துக் கொண்டு, சிறு கடலை ஒட்டிய ஒரு துறைமுகத்தே பகல் உணவுக்காக உந்து வண்டி நிறுத்தப் பெற்றது. அருகிலே நீர்மூழ்கிக் கப்பல், எலிகிராப்படர்', சிறு கப்பல்கள், படகு கள் நிறுத்தப் பெற்றிருந்தன. மக்கள் அவற்றில் ஏறி