பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அடுத்து பசிபிக் கடற்கரையினை - பெருங்கடல் எல்லையை அடைந்தோம். உயர்ந்த அலைகள் மோதின. இடையிடை பெரும்பாறைகள் (Seal Rocks) இருந்தன. எனவே இப்பக்கம் கப்பல் வரவில்லை. மற்றொரு பக்கத்தில் அமைதியான சூழ்நிலையில் உள்ள பெரிய துறைமுகம் கண்டோம். அந்தக் கடல் எல்லையில் இங்கே வாழ்ந்த பழங்குடிமக்கள் - மேற்கு இந்தியர் வழிபட்ட பெரும் பூத உருக்கள் இணைந்த உயர்ந்த கம்பத்தைக் கன்டேன். நேற்றும் சியேட்டலில் நான் கண்ட நீர் வீழ்ச்க்சிக்கருகில் இதே உருவம் இருந்தது. இந்த இடங்களில்தாம் அவர்கள் கூடி, தெய்வ வழிபாடு செய்வது உண்டாம். நம் நீலகிரியில் தோதர்கள் வழிபடும் உயர்கம்பமும், நம் நாட்டு மன்னார் சாமி கோயில் பேருருவங்களும் என் எண்ணத்தில் வந்தன. இவற்றை எல்லாம் கண்டபோது, நம் நாட்டொடு என்றாவது இவர்கள் தொடர்பு கொண்டவர்களாக இருந் திருக்க வேண்டும் என்ற நினைவு உண்டாயிற்று. பசிபிக் கடற்கரை நெடுகிலும் பாறைகள். சிலவிடங் களில் மணல் இருப்பினும் மக்கள் அவை ஈர்த்துக் கொள்ளும் என்ற காரணத்தால் அங்கே செல்வதில்லை, அதைத் தாண்டிவேறொரு பக்கமாக அகநகர் நோக்கி திரும்பினோம். வழி நெடுக, சுமார் ஒரு கல் தொலைவு - மலைச்சரிவுகளில் பசுமையும் இனிமையும் ஓங்கிநின்றன; மலர்ச் செடிகளும் கூடத்தான். இதுவரையில் பார்த்த பகுதிக்கு நேர்மாறாக இது அமைந்தது. சிறு நீர்வீழ்ச்சியும் இருந்தது. சிறுசிறு விளையாடுமிடங்களும் குதிரைச் சவாரி செய்யும் இட்ங்களும் இருந்தன. நல்ல வெளிச்சமாகக் கதிரவன் ஒளிவீசிய நிலை மாறி, திடீரென மேக மூட்டம் தோன்றி, எல்லாப் பகுதி களையும் மறைத்து விட்டது. சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப் பில் உள்ள அந்த பசும் பகுதி மறைக்கப் பெற்றது. பிறகு நாங்கள் அருகிலிருந்த இருபெரும் குன்றங்களில் உச்சிக்கு அழைத்துச் செல்லப் பெற்றோம். வளைந்து வளைந்து செல்லும் அப்பகுதி வரண்டே காணப்பட்டது. ஒரு கல் தொலைவிற்குள் இத்தனை வேறுபாடா என இயற்கை