பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ 23.5-65 349 யினை எண்ணி நின்றேன். அந்த எல்லைக்குள் செல்லுமுன் ஜப்பானியர் தம் பொருள்காட்சிச் சாலையும் எதிரில் நம் நாடு, ரோம் நகரம் போன்று பெரும் சிலைகள் வைக்கப் பெற்ற இடமும் இருந்தன. பல புதிய கட்டங்கள். புதிய புதிய பாதைகள், காட்சி சாலைகள், கலிபோர்னிய பல்கலைக்கழக நகர் பகுதிக் (University City) கட்டடங்கள் சிறுசிறு தொழிலகங்கள் வந்துவந்து சென்றன. இந்நாட்டு உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி இக் கலி போர்னியா மாநிலத்தில் விளைகிறது என்று, வழியிடைக் கண்ட நிலப் பண்ணையைக் காட்டி அவர் விளக்கம் தந்தார் (BAYCITY) வளைகுடா நகர்ப் பகுதியும், அக நகரின் பிற பகுதிகளும் அம் மலை உச்சியிலிருந்து நன்கு தெரிந்தன. மேகமூட்டமும் மெல்ல விலக்க ஆரம்பித்தது. பிற இடங் களில் காணாத வகையில் வண்டிகள் நேர் எதிர்ப்பக்கம் திரும்பும் நிலை ("U.Twrn) இங்கே இருந்தது. உந்து வண்டிகள் ஒடிக்கொண்டே இருந்தன. பலவகையில் சாலைகளில் - ஓரிடத்தில் 12 தெருக்கள் சேருமிடத்தில் . குறுக்கும் நெடுக்குமாக ஆறுவகை வளை மேம்பாலங்கள் அமைத்திருந்தன. சிலவிடங்களில் மிக ஏழைகளாக வாழ்பவர் தங்கும் சிறு குடில்கள் - (குடிசைகள் அல்ல) இருந்தன. இந்நகரில் செல்வத்தில் செல்வம் பெற்றவரும் அல்லல் பட்டு ஆற்றாது வாடுபவரும் இருந்த காட்சி நம் நாட்டு நகர்களை நினைவூட்டியது. (ஆயினும் குடிசைகள் இல்லை) சாலைகள் ஒட்டிய பாலங்கள் - கடைத்தெரு, நகர் மண்டபம், நகராட்சி மண்டபம் இவைகளைக் காட்டிக் கொண்டே வந்து, மாலை 4.30க்கு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து இறக்கினார் ஒட்டுநர் சாலைகளில் கண்ட கண்ட இடங்களில் வண்டிகளை நிறுத்துவது உட்பட, மேலே காட்டிய பிறவும் சேர்ந்து - என்னை நான் அமெரிக்காவைக் கடந்து நம் நாட்டிற்கு வந்து விட்டேனோ என்ற நினைவை உண்டாக்கின. 4.30க்கு அன்பர் வெங்கடாசலம் என்னை வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.