பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மாலைச் சிற்றுண்டிக்குப் பின் 50 கல் தொலைவிலுள்ள பர்க்கலே (Burkley) செல்லப் புறப்பட்டோம். அங்கே தமிழ் பயின்ற நல்ல அறிஞரும், தமிழாய்ந்த பழம் பெரும் புலவரும் வாழ்கின்றனர். கலிபோர்னியா பல்கலைக் கழகம்' என்ற சிறந்த பழைய பல்கலைக்கழகம் அங்கே உள்ளது. அங்கே தமிழ் உண்டு. அந்த வழியில் நான் கடற் கழியைக் கடக்க 7 கல் தொலைவில் கீழ்ப்பாலம் கட்டி யுள்ளனர். அங்கேதான் அந்தப் பெருங்கழிக்கு அடியில் பாதாள இரெயிலும் ஒடுகிறது. எனக்கு வியப்பாக இருந்தது. இருவரும் மாலை ஏழு மணிக்கு, ஜார்ஜ் ஹார்ட் (George Hart) என்ற அந்தத் தமிழறிஞர் வீட்டிற் குச் சென்றோம். நல்ல தமிழில் வணக்கம் கூறி வரவேற்றார். அவர் நம் மதுரையைச் சேர்ந்த தமிழ்பயின்ற (எம். ஏ.) ஒரு மங்கையை (கொளசல்யா) மணம் செய்து கொண்டிருந்தார். அவரும் நம்நாட்டுப் பெண்போன்று ஆடை உடுத்தி, முகத் தில் பொட்டிட்டு தமிழ்ப் பெண்ணாகவே காட்சி அளித்தார். அவர்கள் வீட்டில் விநாயகர், முருகன், வேங்கடவன், இலக்குமி, சரஸ்வதி படங்களும் விநாயகர் உருவமும் இருந்தன. காரிலும் விநாயகர் படம் ஒட்டி இருந்தனர். அவர் தமிழகம் வந்து தங்கி, தமிழ் பயின்று, சில நல்ல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தற் போது கம்பராமாயணம் ஆரணிய காண்டத்தை மொழி பெயர்த்து வைத்துள்ளார்: அச்சுக்குத் தரத் தயாராகி உள்ளதாம். அவர் வீட்டிற்குத் துப்புரவு செய்து சுவர், மாடி, மேல்பக்கம் அனைத்தும் வண்ணம் தீட்டப்பெறுகின்ற காரணத்தால் முறையான அமைப்பில் இல்லை. அந்தப் பணியை அக் கல்லூரி மாணவர்களே செய்து, ஊதியம் பெற்றுத் தம் படிப்பிற்குப் பயன்படுத்துகின்றனராம். நான் முன்னரே சுட்டியபடி, இங்கே பலர் தாம் பணிசெய்து பணம் பெற்றே படிக்கின்றனர். அவர்கள் வேலை நன்றாக உள்ளதோடு அவர் பெறும் தொகையும் பிற வேலையாட் களைக்காட்டிலும் குறைவாக உள்ளதாம். அவருக்கும் மாணவருக்கு உ த வு கிறோம் என்ற மனநிறைவு