பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கொண்டிருந்ததில் நான் மிக மகிழ்ந்தேன். தமிழ்ப் பல்கலைக் கழகச் செயல்கள் பற்றி விளக்கினேன். அவர் தற்போது திராவிட மொழியினைச் சார்ந்த பிராகுவி' மொழிபற்றி ஆராய்ந்து வருவதாகச் சென்னார். இந்த 81வயதிலும், அவர்தம் துணைவியார் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையாக இருக்கும் நிலையிலும், எல்லா வேலைகளை யும் தாமே செய்துகொண்டு, நம் மொழிபற்றி ஆராய் கின்றார் என்றால் அவரைத் தமிழ்த் தெய்வத்தின் தலை மைந்தன் என்று சொல்ல வேண்டுமல்லவா! தமிழால் - ஆராய்ச்சி என்ற பெயரால் - தமிழழைக் கொலைசெய்வார் வாழும் நாளில், கைமாறு கருதாது தமிழ்நலம் காணும் அவரை வணங்கினேன். இனிமையாகச் சுமார் ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மணி 10.30ஆனபடியால் அவரிடத்தும் ஜார்ஜ் ஆர்ட் தம்பதிகளிடத்தும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். ஐம்பது கல் தொலைவினை ஒருமணி நேரத்தில் கடந்தோம். வழியிடை இப்படிப் பிறநாட்டார் தமிழ்போற்ற, நம் நாட்டார் வேறு நிலையில் செல்வதைப்பற்றி எண்ணிப் பேசிக் கொண்டே வந்தோம். இரவு 11.30 மணிக்கு வீடு வந்து சேர, உடன் உறங்கத் தொடங்கினேன்.