பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோலாஸ் ஏஞ்சலஸ் 24-5-85 காலை உறங்கி எழுந்தேன். வீட்டு அன்னையார் விடிய்லில் எழுந்து தம் பணி மேற் செல்ல வேண்டியவர், எங்களுக்காகக் காலை உணவு தயார் செய்து வைத்தார். நாள்தோறும் 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவாராம்: 6 மணி அளவில் அலுவலகத்தில் இருக்கவேண்டுமாம். பிள்ளைகளையும் வந்த விருந்தினர்களையும் கவனித்து இப்படி ஒய்வற்று உழைக்கும் அவர்தம் தியாக வாழ்வை எண்ணிப் போற்றினேன். பிறகு என் காலைக் கடன்களை மெல்லாம் முடித்துக் கொண்டேன். பிள்ளைகளும் வெங்கடாசலம் அவர்களும் 7.15க்குப் பணிமேற் சென்றனர். கடந்த நான்கு நாட்களிலும் இடையறாத பணிகளும் அலைச்சலும் இருந்தமையாலும் உடல் சோர்வுற்றமையா லும் பெரும் பாலனவற்றைக் கண்டு விட்டமையாலும் நான் இன்று எங்கும் வெளியில் செல்லவில்லை. மாலை 4.30க்கு லாஸ்ஏஞ்லசஸ் செல்ல விமானம். அவர் 3மணிக்கு வந்து விடுவதாகக் கூறிச் சென்றார். செல்லு முன் எனக்கு மதியம் வேண்டிய உணவுகளையெல்லாம் எடுத்து வைத்து, காட்டிச் சென்று புறப்பட்டார். நேற்று மாண்ல அவர்தம் வங்கியில் எப்படி பணம் எடுத்தார் என்பதைக் கண்டேன். எங்கோ ஒருவங்கியில் இவர் கணக்கு. அதற்கு ஒரு தனி எண் - ஒரு தனியான அட்டை. அதை தெருவில் உள்ள ஒரு பெட்டியில் போட்டால் என்ன வேண்டும்? அடுத்து என்ன செய்ய' 23 سحصص . rي