பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வேண்டும்?' எனக் குறிப்பு வருகின்றது. தன் எண்ணைக் குறித்து தொகையான பணம் பற்றியும் சுட்டவேண்டும். "விரைவில் வரும் என்ற குறிப்பும் வருகிறது. அடுத்த நிமிடத்தில் குறித்த தொகை வந்து நிற்க முன் மறைக்கும் சிறு கதவைத் தள்ளி எடுத்துக் கொண்டார். தெருவில் ஒரு மூலையில் . ஒரு வங்கியோடு இணைந்த இப்பெட்டி, அவர் கணக்கு இன்றேனும், கணிப்பொறி அமைப்பில் அவர் வங்கியின் கணக்கைச் சரிபார்த்து, வேண்டிய தொகையினை மிகு விரைவில் தந்த அந்த இயந்திர வளர்ச்சியினைக் கண்டு வியந்தேன். நம் நாட்டிலும் இது போல ஒரிடத்தில் உள்ள தெனக் கேட்டும், இங்கேயும் பலவிடங்களில் இருந்தும் இது வரையில் நான் நேரில் காணவில்லை. அதே வேளையில் நம் நாட்டில் 112மணி 1ம்ணி நேரம் காத்திருந்து, அந்த வங்கியில் பணி புரியும் கடை நிலை ஊழியர் முதல் அனைவர் தயவை யும் நாட்டி நின்று, கூறும் வசைச் சொற்களையும் ஏற்று ஏங்கி ஏங்கி நம் பணம் பெறும் நிலையினையும் இதையும் எண்ணினேன். இங்கே நேரில் பணம் பெறச் சென்றாலும் இரண்டொரு நிமிடத்தில் பெறலாம் என்றார் அவர். உடல் ஒய்வு தேவை என்றது. எனவே அனைவரும் பணிமேற்சென்ற பின் நான் சிறிது ஓய்வு பெற்றேன். பின் பகல் 12மணி அளவில் எனக்கென வைத்திருந்த உணவினை உண்டேன். மேணிக்குப் புறப்படவேண்டி அதற்கென ஏற்பாடுகளைச் செய்து கொண்டேன். லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள திருமதி. உஷா அவர்களுக்கு மறுபடி தொலைபேசி வழியில் நான் வரும் நேரம் முதலியன பற்றிக் குறித்தேன். அனைவரும் சென்றபின் என் சிந்தனை நீண்டது. இந்த நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகளும் 8 அல்லது 9க்கு தொடங்கி, அவர்கள் விரைந்து தொழிற்படுவது போன்று ஏன் நம் நாட்டிலும் செய்யலாகாது? சில சமயங்களில் சூரியன் 8-9க்கும் புறப் படும் நாட்டில் இயலும்போது 6மணிக்குப் புறப்படும் நாட்டில் ஏன் இயலாது? தொழிற்சாலைகளின் உற்பத்திப்