பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ-லாஸ் ஏஞ்சலஸ் 24.5.85 356 பெருக்கு இந்நாட்டின் செல்வ வளத்தை வளர்ப்பது போன்று நம் நாட்டில் ஏன் வளர்க்கக் கூடாது. பிற நாடு. களிலிருந்து கோடி கோடியாகக் கடன் வாங்கும் நாம், கடன்தரும் இந் நாடுகளைக் கண்டாயினும் பாடம் கற்றுக் கொள்ளக்கூடாதா. இளம் பிள் ைள கள் எவ்வளவு தெளிவோடு காலைவேளைகளில் கல்வி பயில ஆர்வம் காட்டுகின்றனர். மாலை 3 மணிக்கே பள்ளிகள் விடப் பெற்றதும் வீட்டுக்கு வந்து விளையாடி, மாலையில் வீட்டுப் பாடங்களைப் படித்தும் எழுதியும் முடித்து 6 அல்லது 7 மணிக்கே உணவு கொண்டு உரிய வேளையில் உறங்கி, உடல் நலத்தைப் பேணி நெடுங்காலம் வாழ இளமையிலேயே கற்றுக்கொள்ளுகின்றனரே. பெரியவர்களும் அப்படியே வாழ்ந்து வாழ்நாள் பெருகவும் நோயின்றி வாழவும் வழி காணுகின்றனரே. எத்தனை எத்தனை புதிய கண்டு பிடிப்பு கள்-எத்தனை எத்தனை புதுப்புதுக் கைத் தொழில்கள்எத்துணைப் பொருள்கள் ஏற்றுமதி. இயற்கை வளமும் மக்கள் பெருக்கமும் உள்ள நம் நாட்டில் முயன்றால் இந்த நாட்டைவிட எத்தனையோ மடங்கு முன்னேறலாமே. பிற நாடுகளில் தம் வாழ்வையும் வளத்தையும் நாடி, யாராவது திறனாளர்-பொறியாளர்-மருத்துவர்-அறிவாளர் செல் வார்களா? பாவம்! இவற்றை எண்ணிப் பார்க்க நம் தலைவர்களுக்கு நேரம் இல்லையே. நம் நாடு உலக நாடு களுடன் உயர்ந்த நிலையைப்பெற்றுத் தலை நிமிர்ந்து நிற்க வில்லையே நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளம் தருநாடு என்ற குறளை நாட்டு வாழ்வில் செயலாக்க வேண்டும் என யாராவது என்றாவது எண்ணியது உண்டா? பிற்பகல் 3.30 மணிக்கு அன்பர் வெங்கடாசலம் வர அவருடன் விமானநிலையம் புறப்பட்டேன். அவர்கள் விமானநிலையத்தில் டிக்கெட் தரும் இடம் வரை வந்து விட்டுப் புறப்பட்டனர். நான் பிறகு விமானம் புறப்படும். இடம் சென்று அமர்ந்தேன். விமானம் 4.50க்குப் புறப் பட்டது. வழியிடையெல்லாம் மலைகள் பலப்பல: கானாறு