பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கள் பல். சுமார் 400கல் தொலைவு கடந்தது. சிலவிடங் களில் பயிர்ப்பண்ணைகளும் இருந்தன. சரியாக 6.15க்கு லாஸ்ஏஞ்சிலஸ் கால் வைத்தேன். இந்த ஊர் இந்நாட்டின் இரண்டாவது பெருநகர். (நியூயார்க் நகருக்கு அடுத்து) என்வே விமான நிலையத்தில் பெருங்கூட்டம். பெட்டிகள் எடுக்குமிடத்தில்-ஒரு சுற்றில் மூன்று விமானப்பெட்டிகளை அனுப்பினார். பலரும் கூடி விட்டனர். என் பெட்டிவரும் நிலைகண்டு, அவசரத்தில் நெருக்கடியில் அதை எடுக்க மற்ற வருடன் மண்டி நெருக்க, பக்கத்தில் கைப்பையை வைத்தேன். ஒரு நிமிடம்கூட ஆகவில்லை. திரும்பிப் பார்க்கப் பை இல்லை. உடனே ஒடி அலைந்தேன்-அதில் தர்ன் பாஸ்போர்டு,டிக்கெட் அனைத்தும் இருந்தன. (பணம் இல்லை) எனவே மிக்க திகில் கொண்டு அருகிலிருந்த காவல் துறையினரிடம் கூறினேன். உடனே, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் பையினை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள் பணியினை வியந்து போற்றினேன். பின் என் பெட்டியினை எடுத்துக் கொண்டு, வெளிவரும் ப்ோது, (இங்கே யாரும் வரமாட்டார்கள் டிஸ்டினிலேண்டு' வரை பஸ்ஸில் வந்து இறங்கி. தொலைபேசியில் சொன்னால் அவர்கள் கார் கொண்டு வருவார்கள்) நான் வந்த வ்ெஸ்டர்ன் (Western Airlines) விமானத்திற்கு உரிய அலுவலகத்தின்ர்'என்னை இலவசமாக ஏற்றிச் செல்ல வழி உண்டு என்வும் வீட்டிலேயே கொண்டு இறக்கி விடலாம் என்வும் கூறி, அதற்கெனத் தனிப் பயணச்சீட்டினையும் தந்தனர். ஆந்த வண்டியில் ஏறி இரவு 8 மணிக்கு வீடு அன்ட்ந்தேன். திருமதி. உஷா ஐயர் அவர்கள் நான் தொலைபேசியில் ஏழு மணிக்குக் கூப்பிட வில்லையே என எண்ணி இருந்த வேளையில் நானே நேரில் சென்றமை கண்டு மகிழ்ந்தனர். ஐயர். அவர்கள் வெளியூர் சென்றிருந் தர். அவர்தம் பெண்கள் இருவரும் விலாவும், சாந்தியும் - ஒரு பணிப் பெண்ணும் (மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்) இருந்தனர். குழந்தைகள் அன்புடன் பழகின. அம்மையாரும் இன்முகத்துடன் வரவேற்று, உணவிட்டு ஊர்நலம் பற்றிட்