பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜினிவா4-4-85 27 இங்கே வண்டிகளின் போக்குவரத்து வலப்பக்கமாகவே (Keep to The right) அமைந்துள்ளது. சாலை, இரெயில் இரண்டும் அப்படியே. இங்கேயும் இத்தனை ஒழுங்கு களுக்கு இடையில், குறித்த இலக்குகளை விட்டு, கண்ட இடத்தில் சாலைகளைக் கடக்கும் ஆண்களும் பெண்களும் இல்லாமல் இல்லை. மேலும் ஒடும் வண்டிகளில் ஏற முயலும் இருவகையினரும் உள்ளனர். இவர்களைக் கண்டபோது, நம்நாட்டு மரபினைப் போற்றுவர் இங்கும் உள்ளனரா என வியந்தேன். . சுவிஸ்நாடு மிகச் சிறியது; நம் இமயத்துக்கு அடுத்த உயர் நிலையில் உள்ள ஆல்ப்ஸ் (Alps) மலைச்சரிவில் உள்ளது. 'எனவே எங்கும் பனிபடர் நெடுமலைகளக் காணமுடிகின்றது. இங்கே மூன்று மொழிகள் வழக்கத்திலுள்ளன. எனினும் பிரஞ்சுமொழியே பெரும்பாலோர் கொள்ளுகின்றனர். இந் நாட்டுச் சாலைகளும் ஒழுங்காக உள்ளன. இந் நாட்டில் 'ஜினிவா மூன்றாவது பெருநகரம் என்கின்றனர். இது தலைநகரம் இன்றேனும் அதனிலும் மேலாகப் பல வெளி. நாட்டு மக்கள் கலந்து உறையும்-வந்து செல்லும் இடமாக உள்ளது என அறிகிறோம். தெருவுதொறும்-நிலையந் தொறும் இந்த நிலையினைக் காணமுடிகின்றது. இதன் எல்லையில் விரைந்தோடும் அகன்ற கால்வாய் ஏரியும் அதன் எல்லையில் அமைந்துள்ள எல்லையற்ற படகுகளும் பிறவும் இதற்கு எழிலூட்டுகின்றன. இதன் சிறப்பினைக் கருதித் தான் போலும் முதல் உலகப் போர் முடிந்தவுடன் ஐக்கிய நாடுகள் சங்கம், (League of Nations) இங்கே அமைத்தனர். :920 முதல் 1936 வரை அது செயலாற்றிய இடத்தினை நாளை காணப்போகிறேன். இன்றும் இது உலக அரங்கில் முக்கிய இடத்தினை வசிக்கின்றதல்லவா, "UNISC0" யுனிஸ்கோ போன்றவை செயல்படுகின்ற இடமல்லவா! இத்தகைய எண்ணங்களுக்கிடையில் என்னைப்பற்றிய எண்ணமும் எழுந்தது, இலங்கை, மலேயே முதலிய வுெளி