பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ் ஏஞ்சிலஸ் 25.5.85 காலை சற்று மெல்லவே எழுந்தேன். காலைக் கடன் களை முடித்துக் கொண்டு, குறிப்பு எழுதி முடித்தேன். அம்மையார். குழந்தைக்கு இரவு இருமல் சற்று அதிகமாக இருந்ததெனவும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கூறி, டிஸ்னிலேண்டு காண, மூத்த மகள் iலாவை உடன் அனுப்புவதாகக் கூறினார். காலைச் சிற்றுண்டிக்கு பிறகு நான் என்னை மறந்தேன். எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. சுற்று முற்றும் பார்த்தேன்; எதுவும் புரியவில்லை. திடீரென என்னைச் சுற்றிப் பல வண்ண நிறக் கிளிகள்சிறு பறவைகள்-பெரும் பருந்துகள் சத்தமிட்டன-இல்லை பேசின-அழகாகப் பாடின. அவைகள் மொழியிலன்றுமக்கள் பேசும் மொழியில்-அமெரிக்க ஆங்கிலத்தில் நெடு நேரம் பேசின. என்ன? பறவைகள் பேசினவா என்று கேட்கிறீர்களா? ஆம்! தவறுதான்-பறவைகள் மட்டுமல்ல ஓரறிவுடைய செடிகளில் மலர்ந்த பலவகை வண்ண மலர்கள் வாய் திறந்து பேசின. ஆறறிவுடைய மக்கள் தவறிழைத்த வழி, அந்தப் பறவைகளையும் மரம், செடி, கொடிகளையும் அழைத்து உதாரணம் காட்டுவது நம் நாட்டு மரபு அல்லவா! நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலேதான் தருத லால், என்று மரம் காட்டியும்,