பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றது. நான் இந்த உலகிற்கு வந்து நாற்புறமும் திரும்பிப் பார்த்தேன். நான் கடந்த ஐந்து மணி நேரமாக 8.30 முதல் 1.30 வரை கண்ட காட்சிகளே நான் மேலே கூறியவை என நானே உணர்ந்து கொள்ள நெடுநேரமாயிற்று. நான் பார்த்தவை சில: பார்க்க வேண்டியவை பலப்பல. அடுத்து எந்தப்பக்கம் போகலாம் என நினைத்தும் எதைப் பார்க்க லாம் என எண்ணியும் நாற்புறமும் நோக்கினேன், எங்கும் மக்கள் கடல். நான் காலையில் வந்தபோது கூட்டம் இல்லாமையால் மிக எளிமையாக எல்லாவற்றையும் காண முடிந்தது. இப்போது எத்தனையோ மக்கள் இருபதா யிரத்துக்கு மேலும் இருக்கலாம் என்றும் விடுமுறையாதலால் இக் கூட்டம் என்றும் அறிந்தேன். எங்கெங்கும் கியூ (0') வரிசை. ஒரு புறம் கப்பல். ஒரு புறம் பாய்மரக் கப்பல் - ஒரு புறம் கட்டுமரம், ஒருபுறம் பல படகுகள், இவை நீரில் மிதந்து எண்ணற்ற மக்களை ஏற்றிச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஒரு புறம் நீராவி இரெயில்-ஒரு புறம் மின்சார இரெயில்-ஒருபுறம் அணு ஆக்க இரெயில், ஒரு புறம் மேலே வானில் மோட்டார்கள். இப்படிப் பலப்பல வண்டிகளில் மக்கள் ஏற்றிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தனர். ஒரு புறம் கீழ் மேல் சுழலும் இராட்டினம்; ஒரு புறம் நாற்புறம் 'ஆடும் ஊஞ்சல் ஒரு புறம் வளையவரும் இராட்டினம். இப்படிப் பலப்பல விளையாட்டு இடங்களும் உள. இவற்றில் குழந்தைகள் மட்டுமன்றிப் பெரியவர்கள் வயோதிகர்கள் அனைவரும் ஏறிச் சவாரி செய்கிறனர். 3. - . எங்கும் மக்கள் கூட்டம். ஒரு புற்ம் வரிசை வரிசை யாகப் பலவற்றைக் காண நிற்பவர். ஆம் கியூவில் நின்று இரண்டு மணி நேரம் கழித்தே உள் புகவேண்டும். அங்கே பார்ப்பதோ பத்து நிமிட நேரம்தான். எனவே அதற்குமேல் அங்கே புதுமையாக - முக்கியமாகப் பார்ப்பதற்கு ஒன்று மில்லையாதலாலும் எங்கள் இருவருக்குமே சோர்வு தட்டிய காரணத்தாலும் உடனே புறப்பட நினைத்தோம். பிறகு