பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ்ஏஞ்சலஸ் 255.85 365 புகு முன் ஏதேனும் உண்டு - பசி நீங்கிச் செல்லலாம் என உணவுச்சாலை ஓரம் சார்ந்தோம். பல உணவுச்சாலைகள். ஆயினும் எங்கும் கூட்டம். உள்செல்ல ஒருமணி நேரத்துக்கு மேலாகும். சென்றாலும் எங்களுக்கு வேண்டிய மரக்கறி உணவு கிடைக்குமா என்பது ஐயம். எனவே வெளியில் கிடைத்த சோளப்பொறியினையும் குளிர்ந்த பழ நீரையும் வாங்கி அருந்தினோம். (அதற்கும் அரைமணிநேரம் காக்க வேண்டியிருந்தது.) "மணி 2-30தைக் கடக்கும் நேரம். மக்கள் வெள்ளமோ அலை அலையாகப் புரண்டது. எனவே வீட்டுக்குச் செல்வதே சிறந்த வழி என்று அன்னையாருக்குத் தொலை பேசி வழியே தகவல் சொன்னோம். அவர்களும் உடனே வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவர்தம் இளைய மகள் நோய் நீங்கி விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். 'Disney land டிஸ்னி நிலம்’ என்னும் பகுதி டிஸ்னி' என்பரால் முப்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பெற்று, பலவகைகளில் மெல்ல மெல்ல வளர்ச்சியுற்று இன்று இந்த நிலையில் சிறந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் நிலத்துக்கு மேல் இதன் பரப்பு இருக்கலாம். எத்தனையோ வகையான அறிவியல் - அணுவியல் காட்சிகள். பழம் பெரும் ம்க்கள் வாழ்க்கை முறை . இன்றைய அமெரிக்கா - சில உலக அரங்கக்காட்சிகள் . வேடிக்கை விளையாட்டுகள். ஊர்தி விளையாட்டுகள் எனப் பல உள்ளன. இன்னும் விரிவாக்கம் ப்ெறத் திட்டங்கள் உள்ளனவாம். இதே போ ன் ற அமெரிக்க நாட்டின் தென் கோடியில் உள்ள பிளாரிடா (Florida) மாநிலத்திலும் ஒன்று உண்டு என்றும் இரண்டில் ஒன்றினைக் காட்டாயம் நான் காண வேண்டும் என்றும் சென்னையிலேயே பல அன்பர்கள் கூறினர். இங்கே வந்த பிற்கு இரண்டில் இதுவே சிறந்ததுஎனக் கூறினமையாலும் நான் பிள்ாரிடா செல்லப் போவதில்லையாதலாலும் இதனைக்கண்ட் மன் நிறைவு பெற்றேன். இந்த லாஸ்