பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஏஞ்சலஸ்க்கு. டிஸ்னிநிலம் (1)படம் எடுக்கும் 'ஆலிவுட் (2) சென்னை போன்ற பரந்த நிலப்பரப்பினை, மணல்வெளி யினை உடைய நீண்ட கடற்கரை (3) இம்முன்றும் அழகூட்டி இதற்குச் சிறப்பைத்தருகின்றன. நாள்தோறும் . அதிலும் விடுமுறை நாட்களில் இவற்றைக் காண இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும்வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். டிஸ்னிநிலத்'தைத் தொடர்ந்து காண மூன்று நாள் வரை டிக்கெட் வழங்குகின்றனர். அவ் வளவு பெரிது; நான் முக்கியமானவற்றை கண்ட மனநிறை வோடு, நாளை ஆலிவுட், கடற்கரை இரண்டையும் காண முடிவு செய்து அமைந்தேன். வீட்டுக்கு வந்தவுடன் அம்மையார் அளித்த உணவினை உண்டு சிறிது நேரம் ஒய்வு பெற்றேன். பின் ஆறுமணி அளவில் தமிழ்ப்படம் (வீடியோ) தொலைக்காட்சியில் இட்டுக் காண்பித்தனர். எட்டு மணிக்கு உணவு கொண் டோம். திருவாளர். பத்மநாபன் அவர்கள் 9 மணி அளவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் உணவு கொண்டு வந்தபின், நெடுநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந் தேன். அவர்கள் தமிழராயினும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்களாதலின் பள்ளியில் மலையாளம் பயின்றார் களாம், எனினும் நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அறிந் தவர். என்னிடம் தமிழிலேயே பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உறவினர்கள் சென்னையில் உள்ளனர். தமிழ்நாட்டு நிலைபற்றியும் இந்திய நாட்டு நிலை பற்றியும் பேசினார். அந்த நாட்டு அரசாங்கம் அறிவில் சிறந்தவர்களையெல்லாம் இப் படி வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, வாளா இருந்து, அறிவுச் சூனியமாகி நிற்கின்றதே என்று வருத்தப்பட்டார். ஆம்! இங்கே நான் கண்ட பல பொறியாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர் கள் அனைவரும் சிறந்த விற்பனராக இருந்து இங்கே புதுப் புது ஆய்வுகளைக் கண்டு இந்த நாட்டுக்கு வழங்குகின்றனர். இவை அனைத்தும் நம் நாட்டுக்குப் பயன்பட்டால்