பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ்ஏஞ்சலஸ் 25.5.85 367 எவ்வளவு சிறப்பாக இருக்கும் என நான் எண்ணினேன். அறிவின் திறன் உலகுக்கு உணர்த்தப்பெறுவதோடு நாடும் பொருளாதாரத்தில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக் குமே என்பதை முன்னும் கூறியுள்ளேன். 10 மணி அளவில் திரு. சபரிநாதன் அவர்களோடு தொலைபேசியில் பேசினேன். சிகாகோ சான்பிரான் சிஸ்கோ ஆகிய இடங்களில் முயன்றும் கிடைக்காத அன்பர் இன்று கிடைத்தார். அவர் பம்பாய்த் தமிழ்ச்சங்கச் செயலாளராக இருந்த காலத்தில் நான் சென்று பேசியுள் ளேன். அதையெல்லாம் நினைவூட்டி, புறப்படுமுன் நாளை இரவாயினும் அவர் வீட்டிற்கு வருமாறு அழைத். தார். பள்ளிக்கும் ஏதேனும் நன்கொடை வழங்குவதாகவும் சொன்னார். நான் திரு. பத்மநாபன் அவர்களுடன் கலந்து எப்படியும் புறப்படுமுன் காண்பதாகவும் நான் நாளை 'ஆலிவுட் சென்று திரும்பியபின் தொலைபேசியில் பேசி ஆவன செய்யலாம் என்றும் கூறினேன். எப்படியும் காண வேண்டும் என்ற அவர்தம் அன்பினை எண்ணினேன். திரு. பத்மநாபன் அவர்களும் அவருடன் பேசியதில் அவர் பண் பிணை உணர்ந்தார். இரவு , 11 மணி அளவில் துயிலச் சென்றேன். -