பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ்ஏஞ்சலஸ் 26.5.85 369 பெரும் குலைகளை ஈனுகின்றது. நான் தங்கிய வீட்டிலேயே பெருமரங்கள் வளர்ந்து குலை தள்ளியுள்ளமை கண்டேன். நம் நாட்டினைப் போலவே, காய், பூ, பழம், தண்டு, நார் இலைகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கே ஒரளவு குளிர் இருப்பினும் மலரும் மலர்கள் மணம் வீசுகின்றன. கரப் பான், எட்டுக்கால் பூச்சி போன்றவையும் காக்கையும் நம் நாட்டுப் பறவைகளும் காணப்பெறுகின்றன. கடற்கரையில் வேறு பெயரில் மீன்களைப் பிடிக்கும் பறவைகள் இருப்பினும் அவை நம் நாட்டுக் கருடனை ஒத்திருக்கின்றன. இத்தகைய இயற்கை நிலையொடு மக்கள் செயற்கை அமைப்பும் பல வகையில் ஒத்துள்ளன. வீடுகள் நம் நாட்டுக் கூறை வேய்ந்த - ஓடுகள் அடுக்கிய வகையில் அமைந்துள்ளன. சாலைகளில் திருப்பங்கள் உள்ளன. கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லை. கார்தளைத் திருப்ப நம் நாட்டினைப்போன்று. பலவிடங்களில் வசதிகள் செய்துள்ளனர். இந்த ஊரில் ஒடு கின்ற ஏஞ்சிலஸ்' என்ற ஆற்றில் நம் பாலாற்றைப் போன்று மணல்தான். ஒடுகிறது. இந்த நாட்டில் எந்த இடத்திலும் கடந்த ஐம்பது நாட்களில் எங்கும் இதுபோன்ற மணல் ஆற்றினைக் காணவே இல்லை. எங்கும் வெள்ளப் பெருக்கினைக் கண்ட எனக்கு இது வியப்பை அளித்தது. சுற்றிலும், குன்றுகள் பலப்பல பழ மரங்கள். சோளம் பயிரிடு பண்ணைகள். 'சப்போட்டா போன்ற பலவகைப் பழமரங்கள், இவை அனைத்தும் நான் நம் நாட்டுக்கே வந்து விட்டேன் என்ற ஒர் உணர்வைத் தந்தன. ஆம்! இடையில் இன்னும் 15 நாட்கள்தானே. மேலும் இப்பெரு நிலப்பரப்பில் இன்றுதான் நான் இருக்கிறேன். நாளை இந் நாட்டு ஆட்சியோடு ஒன்றியதாயினும், அத்தீவு உறாவாய் நிலப்பகுதி இங்கிருந்து 2000கல்லுக்கு மேலும் அப்பால் ஜப்பான் செல்லும் வழியில் நடுப்பகுதியில் உள்ளது. எனவே இந்த நாளில் இந்த நிலமென்னும் நல்லாள் தன் முழுப் முழுப் பொலிவையும் பூரிப்பையும் இயற்கை நலத்தை யும் காட்டி, என்னை வாழ்த்தி வழியனுப்பினாள் என்று கூறுதல் பொருத்தமாகும், . ஏ.-24