பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಖtch Tಿಆಖಿh 26-5-85 3f4 கின்றனர் என்ற காட்சியினைக் கண்டோம். அஞ்சத்தக்க போர்க் காட்சிகள்-தனிமனிதத் தாக்குதல்கள்-குத்துச் சண்டைகள்-புரட்டி எடுக்கும் போர்கள்--இரத்தம் பீரிட்டு வருமாறு காணும் காட்சிகள்-சாட்டை அடிகள் இவ்ை எவ்வளவு எளியதாக, யாருக்கும் ஊறு நேராவகையில் எடுக்கப் பெறுகின்றன என்பதைக் கண்டு வியந்தோம். இவற்றைக் கண்டு கலங்கிக் கண்ணிர் விடும் நம் நாட்டு மக்கள் இவற்றைக் கண்டால் இவ்வளவுதானா' என் எண்ணி மகிழ்வர்: அக்காட்சி முடிவும் இரெயிலில் செல்ல எங்களுக்குக் குறித்த நேரம் (11.30) வரவும் நாங்கள் அந்தச் சுற்றும் இரெயிலில் ஏறி அமர்ந்தோம். 420 ஏக்கர் நிலப்பரப்பில் மலைகளின் சரிவுகளிலும் உயரத்திலும் தாழ்வரையிலும் அமைந்த அந்த யூனிவர்சல் ஸ்டுடியோ’ என்னும் ஆலிவுட் நகரின் பலபாகங்களுக்கு அந்த ரெயில் அழைத்துச் சென்றது. வழிகாட்டி ஒருவர் எங்கள் கூடவே (4 பெட்டிகள் . ஒவ்வொன்றில் ஐம்பது பேர்) வந்து அனைத்தையும் விளக்கிக்கொண்டே வந்தார். பலவிடங்களில் இறங்கி, உள்ளறைகளில் (Indoor shooting) அடுப்பறை உட்படப் பலப்பல வீட்டு நிகழ்ச்சிகள் எப்படி உண்மையெனுமாறு எடுக்கப் பெறுகின்றன என்பதை விளக்கிக் காட்டினர். வண்டியில் இருக்கும்போது,சாலையின் இருமருங்கிலும் உள்ள பல நூற்றுக்கணக்கான பல்வேறு வகைகளில் அம்ைந்த கட்டடங்கள் எவ்வெவ்வாறு எவ் வெவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர் என்பதை விளக்கினர். பெருமழை, மின்னல், இடி, தூறல், பெரும் காற்று வெள்ளப் பெருக்கு. வேரற்றுமரம் விழும் நிலை இவைகளையெல்லாம் கண்முன் காணுமாறு காட்டி விளக்கினார்கள். அவை மிக எளிமையாக அவ்வளவும் உண்மையே என்னுமாறு உள்ளன . என்பதைக் காண வியப்பாக இருந்தது. கடலுள் பெருந் திமிங்கலங்கள், அவை கப்பலைக் கவிழ்க்கும் நிலை, அதில் மக்கள் (பொம்மைகள் - மிக உண்மையான மனிதத் தோற்றத்தில்) மூழ்கும் நிலை காட்டி, அப்பெரு மீன்கள்