பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் திடீரெனத் தோன்றி அச்சமூட்டும் நிலை இவற்றையும் ஒருபுறம் காட்டினர். எங்கள் இரெயில் பக்கத்தில் ஒரு பெருஞ் சுரு தோன்றிய நிலை, சிறு குழந்தைகளுக்கு நடுக்கத்தை உண்டாக்கியது. பூகம்பங்கள், நிலச்சரிவுகள், பிளவுகள், வீழ்ச்சி, அதிர்ச்சி, வழிகள் தூர்த்தல், வீழ்தல் போன்றவற்றை எங்கள் அனுபவமாகவே வண்டியில் இருந்தே காணும்படி செய்தது சிறந்ததாக இருந்தது. பாலம் ஒடியும். உலகம் சுழலும் பல உறுமும் ஒலிகள் அச்சுறுத்தும்.பேரிருள் புகும். பெரும் வெள்ளம் புரளும்.தலைகீழாக வண்டி உருளும் - எல்லாம் பகல்கனவாகவே - நாங்கள் அசையாமல் அந்த வண்டிகளில் இருக்க. அவையும் துளியும் நகராமல் - அப்படி நகருவது போலும் நெளிவது போலும் தோன்றச் செய்தனர். ஓரிடத்தில் சிறு கால்வாய் சுமார் 40 அடி இருக்கும். தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கடக்க வேண்டும். எப்படி என அச்சமாக இருந்தது. இரு பக்கமும் தரையிலிருந்து சுவர் எழும்பிற்று தண்ணீர் இருபுறம் அளவிலேயே நின்றது. மேலே சிறு கசிவு; வழி நன்கு இருந்தது - நாங்கள் அச் செங்கடலைக் கடந்தோம். என்ன விழிக்கிறீர்களா? அங்கே ஏது செங்கட்ல் என்று தானே? ஆம்! அவ்வாறுதான் பத்து கட்டளைகளில் (Ten Commandments) இயேசு பெருமான் செங்கடலைக் கடந்தார் - நாங்களும் கடந்தோம். எனவே நாங்கள் அனைவரும் இயேசுவே ஆனோம். இருநிற முந்நீர் வளைய உலகத்து, ஒரு நீயாகத் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசில் நல்குமதி' என்று நக்கீரர் திருமுருகாற்றுபடையில் முருகன நோக்கி வேண்டிய அடிகள் நினைவுக்கு வந்தன. ஆம் நாங்கள் அவரே ஆனோம். உலகம் மக்களையே பெருவியப்பிற்கு உள்ள்ாக்கிய அந்தக் காட்சி, இப்படி மிக எளிமையாக இங்கே எடுக்கப்பெற்றது என அந்த வழிகாட்டி விளக்கியபோது அப்படியா என அனைவரும் வியந்தனர். இவ்வாறு இன்னும் எத்தனையோ வகையான காட்சிகளைக் 'காட்டிய அந்த இரெயில்-தண்டவாளம் இன்றித் தரையில்