பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ் ஏஞ்சலஸ்27-5.85 375 விடாது செய்து, நாட்டுக்கு நலம் தருகின்றன. இவை அனைத்தும் தனியார் முறையில் திறம்பட இயங்குகின்ற காரணமே நாட்டின் செல்வ வளத்துக்கும் உலகத்தையே கட்டியாளும் பொருளாதார நிலைக்கும் காரணம் என்கின் றனர். - இத்தகைய அரும் காட்சிகளையெல்லாம் கண்டு, 8.30 மணி அளவில் வீடு திரும்பினோம். என்னை விரும்பி வீட்டுக்கு அழைத்த திரு. சவுரிநாதன் அவர்களுடன். நேற்றே சொன்னபடி, இன்று இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் தம்முடைய கடை, வீடு இரண்டிடங்களிலும் உள்ள தொலைபேசியில் பதிலே இல்லை. இன்று இங்கே பெரும்பாலும் ஞாயிறுதோறும். பல இடங்களில் கருநாடக இசையரங்குகள் நடைபெறும் என்றும் தமிழ் மக்கள் அனைவரும் செல்வார்களென்றும் ஒரு வேளை அவர்களும் சென்றிருப்பார்களென்றும் கூறினர். நான்ள காலை மறபடி முயலலாம் என நின்றோம். திரு. பத்மநாபன், நாராயணன் ஆகியோர் பல தமிழ் நாடகங்களில் இங்கே நடித்துள்ளனராம். பின் ஹாவாய் தீவிற்குத் தொலைபேசி வழி எப்படி அங்கு நாளை வந்து சேர்வது என்ற நிலை அறிந்து, அதற் கேற்ப, இங்கிருந்து ஊர்திக்குப் பயண உறுதி செய்து கொண்டோம். பரந்த பாரதத்தை விட்டு, அகன்ற அமெரிக்க நாடுவந்து கடந்த 42 நாள்கள் தங்கிய நான் நாளை இந்தப் பெருமண்ணை விட்டுப் புறப்பட வேண்டும், "ஹாவாயும் இந்த நாட்டொடு ஆட்சி முறையில், இணைந்த தாயினும் (50வது மாநிலம்) 2200 கல் அப்பால் ஒரு தீவுத் தொகுதியாக அது உள்ளது. அண்மையில் - இரண்டாம் போருக்குப் பின்தான் இதனோடு இணைந்தது என்றனர். எனவே என்னை ஏற்று இத்தனை நாள் தன்னை விளக்கி, தன் நிலைகாட்டியதோடு, எனக்கு இடமளித்து பரிந்து உதவிய மண்ணுக்கும் தமிழ் அன்பர்களுக்கும் பிறருக்கும் தலை தாழ்ந்த வணக்கம் செலுத்தி, வணங்கி இறைவனைப் போற்றி இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றேன்.