பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ்.ஜினிவா 5-4-85 கதிரவன் காலை 8-30க்குத்தான் தெரிந்தான். எனினும் நான் முறைப்படி விடியல் 5-மணிக்கு எழுந்து காலைக்கடன் களை முடித்துக்கொண்டு, அமைதியாக இருந்தேன். 8.30க்குக் காலை உணவு தரப்பெற்றது. விடுதி வாடகை யுடனேயே இந்தக் காலை உணவுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளுகின்றனர். மேலை நாடுகள் அனைத்திலும் இந்த ஏற்பாடு உண்டு என்று கூறினர். அளவு இல்லை: எனவே நிறையச் சாப்பிடலாம். காலை உணவு'கொண்டபின் நகர் நலம் காணப் புறப்பட்டேன். நான் தங்கிய இடத்துக்கு அருகிலேயே அதற்கென அமைந்த கூடமும் இருந்தது. "கீ (key) எனும் நிறுவனத்தார் இச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஒரு மணிக்கு ஒரு பஸ் வீதம் நகர் நலம் காணவும், வேறு பிற இடங்களுக்கும் பனிபடர்மலை களுக்கும் அழைத்துச் செல்லவும் ஆல்ப்ஸ் உச்சிக்குச் செல்லவும் ஏற்பாடு செய்கின்றனர். நான் சென்று 10 மணிக்குப் புறப்படும் பஸ் ஏறி நகர் நலம் காணப் புறப் பட்டேன். விளக்கக்கூற வந்த பெண் ஆங்கிலத்திலும் வல்லவளாண்மையின் என் கேள்விகளுக்கெல்லாம் நன்கு பதிலளித்தாள். ஊர் நடுவில் ஒடும் ஏரியோடு கலந்த ஆற்றில் பல படகுகள் நிறுத்தப் பெற்றிருந்தன. அதன் கரை ஓரமே இந்த ஊரின் "பீச்சு (Beach) எனலாம். விடுமுறை நாளானமையின் இயக்கமில்லை என்றனர். நடுவில் ஓரிடத்தில் சுமார் 150