பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச்ைவ்சித்தாந்த மடம் - ஹாவாய் 27-5-85 377 நம்மவர் பெரும்பாலோர் தம் மக்களை இந்ந்ாட்டு நாகரிகத் தில் மூழ்க் வைக்கின்றனர். பின் வகை கெட்டபின்பு சிலர் வருந்தவும் செய்கின்றனர். திரு. சவுரிநாதன் அவர்கள் சிறந்த வகையில் தமிழும் சைவமும் வளர வேண்டும் என்ற உள்ளத்தில் தொண்டு செய்கின்றவர். எனவே இந்தப் போக்கினைக் கண்டு வருந்துகின்றனர். அவர்தம் துணைவி யாரும் அவ்வாறே ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவித்தார். நாட்டிற்குச் சென்று ஏதேனும் நல்ல வழி காணுமாறு வேண்டினர். இத்தகைய உள்ளம் வாய்ந்தவர் பத்துக்கு ஒருவர் இருந்தாலும்கூட, எவ்வளவோ உயர் நிலையில் நம் மொழியும் சமயமும் வாழ்வும் அமையுமே என எண்ணினேன். செல்வவளம் மட்டும் வாழ்வு என்று நம்மவர் சிலர் நினைந்து இங்கேவிந்த போதிலும் . அப்படியே பெருஞ் செல்வம் பெற்ற போதிலும் அவர்கள் மனதில் அமைதியில்லை என்பதை மட்டும் நான் கண்டேன். இதற்கெல்லாம் இந்திய அர்சு வழித்துறை கண்டு, நம்மவர், அவரவர் மனப்படி இந்: நாட்டில் உள்ள தனியார் உரிமை அனைத்திலும் உள்ளபடி : செயலாற்றும் வகையில் ஏற்பாடு செய்யின் இங்கே பெறும் ச்ெல்வத்தை அங்கேயே பெற்று மனநிறைவும் பெறுவர். நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும். . . ." - திரு. சவுரிநாதன் தம்பதிகள் பலப்பல பேச விரும்பினர் . எனினும் நேரம் கிட்டியதால் 11.20க்கு இருவரிடமும் விடை பெற்று விமானத்தில் ஏறினேன். சுமார்ஆறு மணி நேரம் (2200கல்) விமானத்தில் கடந்து செல்லவேண்டும். விமானத் தில் சைவ உணவு இன்றேனும் கேட்டபோது பழம் முதலியன தந்தனர். பொழுதுபோக்க நல்ல திரைப்படம் காட்டினர்; என்மனநிறைவு தரும் வகையில் அது அமைந்தது. இந்தப் பெரு நிலத்துக்கும் ஹாவாய் தீவிற்கும் 3மணி நேரம் வேறு பாடு. அந்த மணிப்படி பிற்பகல் 1.45க்குத் தரையில் காலை வைத்தேன். பின் அங்கிருந்து சைவ சித்தாந்த மடம் இருக்கும் ஹாவாய் தீவிற்கு வேறு விமானத்தில் செல்ல வேண்டும். அந்த விமானம் 3-25க்கு என்று சொன்னார்கள்.