பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஆனால் 4.15க்குத்தான் புறப்பட்டது. நான் அதற்கெனத் தனி டிக்கெட் எடுத்து, அதன் வழியே ஹாவாய் தீவினை அடைந்தேன். சிறு விமான நிலையம். எனவே தொல்லை இல்லை. மடத்தில் இருந்து துறவியர் ஒருவர் கார் எடுத்து வந்திருந்தார். கழுத்தில் நீண்ட உருத்திராட்ச மாலையும் நெற்றியில் திருநீற்றுப் பொலிவும் விளங்கின. சுமார் 20கல் தொலைவிலுள்ள மடத்துக்குச் சென்ருேம். அங்கே மதுரை கருமுத்து சுந்தரம் செட்டியார் மகன் சொக்கலிங்கம் தம் இரு பிள்ளைகளுடன் வந்திருந்தார். அவர்தம் பிள்ளை களை அமெரிக்காவில் படிக்க விடுவதற்காக வந்துள்ளார். நான் மதுரை தியாகராயர் கல்லூரியில் ஓராண்டு பணி யாற்றியபோது அங்கே படித்து, பின் இந்நாட்டில் கல்வி பயின்றனர். அவர் இந்த மடத்தில் ஈடுபாடு கொண்டவர். தொலைபேசியில் நேற்று, தமிழ் நாட்டிலிருந்து சொக்க லிங்கம் என்பவர் வந்துள்ளார் என்று கூறியபோது, நான் யாரோ என எண்ணினேன். வந்தபின் என் உற்றவராகவும் மாணவராகவும் இருந்தார். அவரோடும் வந்த துறவியா ரோடும் தோட்டங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். ஒரு பக்கத்தில் உருத்திராக்க மரங்கள் உயர்ந்திருந்தன. அவற்றின் பழங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. ஆயினும் இங்குள்ள துறவியர் இது பற்றி அதிகம் கவனம் செலுத்த வில்லை. நாங்கள் அவற்றைச் சேகரித்து, தூய்மைப்படுத்தி காசி, தமிழ்நாடு ஆகிய இடங்களுக்கு அனுப்பினால் மிக்க நன்மையாகும் என்றோம். அவர்கள் எப்படித் தூய்மை செய்வது என்பதும் தெரியவில்லை. நான் விளக்கிச் சொன் னேன். உருத்திராக்க மணியில் ஒரு முகம் முதல் 16 அல்லது 18 முகம் வரையில் இருக்கும். நானும் சிலவற்றை ஊருக்குக் கொண்டு வருவதற்காக எடுத்து வைத்துக் கொண்டேன். பின், அங்கே சுயம்பு இலிங்கமாகத் தோன்றிய இடத் தில் பூசை நடக்குமென்றும் (மாலை 6 மணி) அங்கே செல்ல வேண்டும் என்றும் கூறினர். நானும் சென்றேன், அங்கே துறவியார் ஒருவர் மலர் கொய்து, அபிடேகம் முதலியன